சாத்தான்குளம்: தமிழர் திருநாளான தை 1ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த திலீபன் மகராசன் மற்றும் சுப்ரியா தம்பதி பொங்கல் பண்டிகையை கொண்டாடி அசத்தினர்.
திருநெல்வேலியில் மருத்துவராக உள்ள சுப்ரியா திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி "பொங்கலோ பொங்கல்" என குலவையிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி அசத்தினர்.
இதுகுறித்து திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுப்ரியா கூறுகையில்.., நான் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவள் எங்கள் திரிபுராவில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள் அங்கு அந்த பண்டிகையை "ஹங்க்ராய்" என்ற பெயரில் கொண்டாடுவார்கள். அந்த பொங்கலுக்கும் இங்கு தமிழ்நாட்டில் கொண்டாடும் பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மேலும் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள் என தெரிவித்தார்.
தொடர்ந்து திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.