ஐதராபாத்:WWE சாம்பியன் சிட் விசியஸ் (Sid Vicious) காலமானார். அவருக்கு வயது 63. நீண்ட நாட்களாக புற்றுநோயை எதிர்த்து போராடி வந்த சிட் விசியஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு WWE முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது இயற் பெயர் சிட்னி ரேமண்ட் இயுடி, இருப்பினும் WWE ரசிகர்கள் மத்தியில் சிட் ஜஸ்டீஸ், சிட் விசியஸ், சைகோ சிட் ஆகிய பெயர்களாலே பெரும்பாலும் அறியப்பட்டார். 63 வயதான சிட் விசியஸ் தனது 30 வயது மனைவி சபரினா பெய்ஜ், மற்றும் இரண்டு மகன்கள் கன்னர் மற்றும் பிராங்க் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சிட் விசியசின் மறைவ்ஐ அவர்து மகன் கன்னர் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார். World Championship Wrestling (WCW) பட்டத்தை இரண்டு முறை சிட் விசியஸ் வென்றுள்ளார்.