சென்னை : 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் - இல் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்க்கொண்டு வெற்றி பெற்று தங்கம் பதக்கம் வென்றது. இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததற்கு இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணி வீரர்கள் எந்த அணியுடனும் ஒப்பிட முடியாத நிலையில் இன்று விளையாடியிருந்தார்கள்.
இந்த தொடரில் ஒரு போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருந்தது. குறிப்பாக, அர்ஜுன் மற்றும் குகேஷ் ஆகியோர் அணிக்கு எடுத்துக்காட்டாக விளையாடினர். இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் எதிரணியானது சிறப்பாக செயல்பட்டு இருந்தது.
இதையும் படிங்க :செஸ் ஒலிம்பியாட் 2024; வரலாற்று வெற்றியை நோக்கி இந்தியா.. அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல்! - Chess Olympiad 2024