பார்படாஸ்: ஐசிசி9-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் லீக் மற்றும் சூப்பர் எட்டு சுற்று போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதி போட்டியில் மோதின. பார்படாசில் நேற்று (ஜுன் 29) நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அவரும் விராட் கோலியும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.
யான்சென் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி, 3 பவுண்டரி விரட்டி ஆட்டத்தை அட்டகாசமாக ஆரம்பித்தார். ஆனாலும் முக்கிய கட்டத்தில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், அணியில் ஸ்கோர் உயர விராட் கோலி போராடினார். 59 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 76 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இந்திய அணி 176 ரன்களை எடுத்த நிலையில், விராட் கோலி 76 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.