பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு உள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை காட்டிலும் சில கிராம் அதிகம் இருப்பதால தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போகலாம் எனத் தகவல் கூறப்படுகிறது.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (ஆக.6) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதிய வினேஷ் போகத் தொடக்க முதலே ஆக்ரோஷமாக செயல்பட்டு எதிரணி வீராங்கனையை கலங்கடித்தார். வினேஷ் போகத்தின் ஆக்ரோஷ ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் புள்ளிகளே எடுக்காமல் சரணாகதி அடைந்தார்.
இறுதியில் கியூபா வீராங்கனையை 5-க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்திய வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில் 50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் அவருக்கு இன்று (ஆக.7) எடை தகுதி சோதனை செய்த போது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.