சென்னை:அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான கோவா சாலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் சரத் கமலும் கோவா சாலஞ்சர்ஸ் அணியின் மிஹாய் போபோசிகாவுடன் மோதினார். இதில் சரத் கமல் 2-1 (11-6, 11-10, 6-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரண்டாவதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் சகுரா மோரியும், கோவா சாலஞ்சர்ஸ் அணியின் யாங்சி லியுவை எதிர்கொண்டார். இதில் சகுரா மோரி 2-1 (11-9, 11-9, 9-11) என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.
மூன்றாவதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் சரத் கமல் - சகுரா மோரி ஜோடியானது கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாய் - யாங்சி லியு ஜோடியை சந்தித்தது. இதில் சரத் கமல் - சகுரா மோரி ஜோடி 0-3 (9-11, 10-11, 7-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
நான்காவதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் ஜூல்ஸ் ரோலண்ட்டும், கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாயுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஹர்மீத் தேசாய் 2-1 (6-11, 11-7, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னை லயன்ஸ் அணியின் மவுமா தாஸ்ம் கோவா சாலஞ்சர்ஸ் அணியின் யஷஸ்வினி கோர்படே உடன் மோதினார். இதில் மவுமா தாஸ் 1-2 (5-11, 8-11, 11-3) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.