ETV Bharat / state

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி! - ERODE

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதா லட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி
நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2025, 10:08 AM IST

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவித்தது. அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அறிவித்தது.

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதியன்று, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

யார் இந்த சீதா லட்சுமி?

பெயர்: மா.கி. சீதாலட்சுமி M A, M.Phil.,

கணவர் பெயர்: இரா. செழியன், M.E

பெற்றோர்: ம.கிருஷ்ணன், B.Sc. - காந்திமதி

ஊர்: மாரப்பம்பாளையம்

பிறந்த தேதி: 20.03.1975

படிப்பு: முதுகலை ஆய்வியல் நிறைஞர், M.A, M.pil.,

சமூகம் : கொங்கு வேளாளர்

இளங்கலை பொருளாதாரம் . கோபி கலைக் கல்லூரி.

முதுகலை ஆய்வியல் பாரதியார் பல்கலைக் கழகம். கோவை.

பணி : 13 ஆண்டுகள் ஆசிரியர் பணி (2000- 2013)

தற்போதைய பணி : கேபிள் ஆப்ரேட்டர், விவசாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.