ஐதராபாத்:கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய பார்மட்களுக்கு பொருத்தமான மற்றும் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிக் கூடிய வீரர்கள் சிலரே உள்ளனர். அதில் ஒருவர் தான் இந்திய அணியின் ரன் இயந்திரம் என்று அழைக்கப்படும் விராட் கோலி.
அண்மைக் காலங்களாக விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வந்தாலும், இந்திய அணி இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்த பல போட்டிகளில் ஒற்றை ஆளாக களத்தில் நின்று வெற்றி வாகையை தேடித் தந்த பெருமை கோலிக்கு உண்டு. அப்படிப்பட்ட வெற்றி நாயகன் விராட் கோலி இன்று (நவ.5) தனது 36வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விராட் கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஐந்து போட்டிகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பாகிஸ்தானை பதறவைத்த தருணம்:
2012ஆம் ஆண்டு மிர்புரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது பங்காளி நாடான பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 329 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ், நசீர் ஜம்ஷெத் ஆகியோர் சதம் விளாசினர்.
இக்கட்டான சூழலில் இந்திய அணி நம்பிக்கை நட்சத்திரம் கம்பீர் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இந்த சூழலில் களமிறங்கிய விராட் கோலி பாகிஸ்தான் பவுலர்களை சிதறவிட்டு அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்தை மைதானத்தில் நாலாபுறமும் சிதறவிட்ட விராட் கோலி 22 பவுண்டரி ஒரு சிக்சர் என 148 பந்துகளில் 183 ரன்கள் விளாசித் தள்ளினார்.
இலங்கை கதறவிட்ட சம்பவம்:
அதே 2012ஆம் ஆண்டு காமன்வெல்த் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்களை குவித்தது. அந்த முத்தரப்பு தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் 40 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர்.
தொடக்க வீரர்கள் சச்சின் தெண்டுல்கர் மற்றும் விரேந்திர சேவாக் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்டனர்ஷிப்பாக குவித்தனர். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி சிங்கிள் ஹேண்டில் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மொத்தம் 82 பந்துகளில் 133 ரன்கள் குவித்த விராட் கோலி 16 பவுண்டரி 2 சிக்சர் அடித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட தருணம்: