ETV Bharat / state

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற அழைப்பு...ஆர்.என்.ரவியை சந்தித்து அழைப்பு விடுத்த அப்பாவு! - SPEAKER INVITES GOVERNOR

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில்,தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற  வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு அழைப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு அழைப்பு (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2025, 4:59 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் , தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கமாகும். ஆளுநரின் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், கொள்கைகள் அரசின் சாதனைகள், அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்ககள் ஆகியவை இடம் பெறும். ஆளுநரின் உரை சட்டப்பேரவையால் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் படித்து, பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைப்பார்.

2023ஆம் ஆண்டு சர்ச்சை: திமுக ஆட்சி அமைந்தப்பின்னர் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே உள்ள மோதல் காரணமாக அரசினால் கொடுக்கப்படும் பேச்சை திருத்தம் செய்து ஆளுநர் ஆர் என் ரவி படித்தது கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் அந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் முடிவதற்கு முன்பே ஆளுநர் வெளியேறிவிட்டார். ஆளுநர் உரையில் இடம் பெற்ற அம்பேத்கரின் பெயர், திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை; ஆள் இல்லாததால் சோதனைக்காக காத்திருப்பு!

2024ஆம் ஆண்டு சர்ச்சை: 2024ஆம் ஆண்டு பிப்ரவரி12ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்ற ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது தமிழில் உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் வாசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தனது உரையை முடித்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உரையை முற்றிலும் புறக்கணித்தார்.

சபாநாயகர் அழைப்பு: இந்த நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு முறைப்படி அழைப்பு விருப்பதற்காக இன்று காலை சபாநாயகர் அப்பாவு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு அழைப்பு விடுத்தார். அவரும் வர சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆளுநர் உரை குறித்து சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பின் போது, "தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கும். கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் வாசித்தார். இந்த முறை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம்,"என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.