ETV Bharat / state

பாலியல் குற்றச்சாட்டு: வழக்கில் முன்னேற்றம் இல்லாதபோது முன்ஜாமீன் கேட்பது எப்படி? - நீதிபதி கேள்வி - HIGH COURT MADURAI BENCH

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2025, 4:17 PM IST

மதுரை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மீதான பாலியல் வழக்கில், ஏற்கனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மீண்டும் மனுத் தாக்கல் செய்யக் காரணம் என்ன? எனவும், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை பின்னர் எப்படி முன்ஜாமீன் வழங்க முடியும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் முனைவர் ராமகிருஷ்ணன் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளர் மீது மதுரையில் உள்ள பிரபல தனியார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் வெண்ணிலா என்பவர் மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், "பதிவாளர் ராமகிருஷ்ணன் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக பணிபுரிந்த போது, பணி நிமித்தமாக அவரை சந்தித்தேன்.

அப்போது என்னை இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசினார் என்றும், தன்னை சென்னைக்கு தனியாக வரவேண்டும் என்றும், தனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் கல்வித்துறையில் உயர்ந்த பதவிகளை வாங்கித் தருகிறேன் என்றும், தனது படத்தை ஆபாசமாக சித்தரித்து தனக்கே அனுப்பினார் என்றும், அதனைக் கண்டித்ததால் சிலரை வைத்து என்னை மிரட்டுகிறார்" எனவும் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் என் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். பொய்யாக என் மீது புகார் கொடுக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கக் கூடிய நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்படுவேன்' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை இன்று (ஜனவரி 3) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்பொழுது, கல்லூரி முதல்வர் வெண்ணிலா தரப்பில், இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். அதில், "பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டு ஒரு மகளிர் கல்லூரியின் முதல்வரே தவறாக அழைத்துள்ளார். இவர் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: 'விஜய், அண்ணாமலை புகைப்படத்தை மார்ஃபிங் செய்த யூடியூப் சேனல்' - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி எவ்வாறு மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தாரோ அதுபோல் இவர் செயல்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து விசாரணை செய்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, "ஏற்கனவே பதிவாளர் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்ததைத் தொடர்ந்து முன்ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் முன்ஜாமீன் தாக்கல் செய்ய காரணம் என்ன? ஏன் மீண்டும் மீண்டும் இதுபோன்று தாக்கல் செய்கிறீர்கள்? இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, அவ்வாறு இருக்கும் போது எப்படி முன்ஜாமீன் வழங்க முடியும்" எனக் கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், கால அவகாசம் வேண்டும்" எனக் கோரினார். அதனைத் தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கை (ஜனவரி 6) வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.