சேலம்:டிஎன்பிஎல் 8வது சீசன் கிரிக்கெட் தொடர் சேலத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ், ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸை எதிர் கொண்டது. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற, இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக சுஜய் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் களமிறங்கினர். இதில் சுரேஷ்குமார் 6 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் விக்கெட் இழந்து வெளியேறினர்.
இதனையடுத்து களமிறங்கிய சச்சின் 30 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய முகிலேஷ் 13 ரன்களுக்கும் வெளியேறினார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷாருக்கான் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் நடராஜன் வீசிய பந்தில் விக்கெட் இழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய யாரும் பெரியதாக சோபிக்கவில்லை.
161 இலக்கு:இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பாக நடராஜன் மற்றும் அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனை தொடர்ந்து 161 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா ஆகியோர் களமிறங்கினர்.