சேலம்:சேலத்தில் இன்று இளைஞர் நலன் விளையாட்டு துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மேலும் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பாராலிம்பிக் வீராங்கனை துளசிமதி முருகேசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளேன். சிறிய வயதில் இருந்து 13 ஆண்டுகளாக எனது தந்தை தான், எனக்கு பயிற்சி அளித்தார். முழுக்க முழுக்க அரசு மைதானத்தில்தான் பயிற்சி எடுப்பேன்.
பாராலிம்பிக் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேச்சு (Credits- ETV Bharat Tamil Nadu) அரசு மூலமாக கிடைக்கும் சலுகைகளை வைத்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளேன். வெளிநாடுகளுக்கு சென்று போட்டிகளில் கலந்து கொள்ளும்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விசாரிப்பார்.அது எனக்கு தன்னம்பிக்கை அளிக்கும்.
இதையும் படிங்க:2025 ஐபிஎல் தொடரிலும் CSK-வில் தோனி? - சிஇஓ விஸ்வநாதன் கூறியது என்ன?
அதேபோல் பதக்கம் வென்று வந்தவுடன் முதலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்திப்பேன். பதக்கம் வென்று வந்த உடனே ஊக்கத்தொகை பரிசு அறிவிப்பர். எந்த மாநிலத்திலும் இதுபோல் விளையாட்டு வீரர்களை கவனத்தி கொள்ளமாட்டகள். விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆன பிறகு தான் விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளும் ஒருகிணைந்து கலந்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து அடுத்த பாரா ஒலிம்பிக்கில் போட்டியில் அதிக பதக்கங்கள் பெறுவார்கள். தமிழகத்தில்தான் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் ஊக்கமும் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். தமிழக விளையாட்டு துறை விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச கலத்தையும் அத்றகான வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. எனவே விளையாட்டு வீரர்கள் அனைத்து சலுகைகளும் பயன்படுத்திக் கொண்டு நிறைய பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பது எனது கருத்து” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்