தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒரே கேட்ச்.. 2026 டி20 உலக கோப்பை வரை சூர்யகுமார் யாதவ் தான் கேப்டன்! அப்ப ஹர்திக் பாண்டியா? - India T20 Cricket Team Captain - INDIA T20 CRICKET TEAM CAPTAIN

2026ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
File photo of Suryakumar Yadav (ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 9:09 AM IST

டெல்லி: இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கையுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 20 ஓவர் பார்மட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய கேப்டனை தேர்வு செய்யும் கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

டி20 கேப்டன் பொறுப்புக்கு ஹர்திக் பாண்டியா பரிசீலிக்கப்பட்ட நிலையில், நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிப்பது என அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் இலங்கை செல்லும் இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பும் வெளியாகும் என நம்பப்படுகிறது. முன்னதாக இந்திய அணியின் தலைம பயிற்சியாளர் கவுதம் பீர் மற்றும் ஏனைய பயிற்சியாளர்கள் அணி நிர்வாகத்தினர் நடத்திய அலோசனையில் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ரோகித் சர்மா கேப்டனாக இருந்த போது, ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டார். ரோகித் ஓய்வுக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு தலைமை ஏற்க முழு தகுதியுடன் இருக்கிறார். ஆனால் சூர்யகுமார் யாதவ் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவராக இருப்பார் என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் கருதுகின்றனர்.

இதை ஹர்திக் பாண்டியாவிடமும் அணி நிர்வாகம் தெரிவித்ததாக தெரிகிறது. அணியின் உறுதித்தன்மையை நிலைக்க செய்யவும், நீண்ட கால அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 2026ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டி வரை இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் 8 டி20 ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்களில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்படும் நிலையில் துணை கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுகிறது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் விலகி உள்ளனர். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடி வருவதால் ஓய்வு அளிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் கவுதம் கம்பீரின் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதால் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இந்திய அரசு மறுக்கிறதா? எழுத்துப்பூர்வமாக பிசிசிஐ பதிலளிக்க பிசிபி கோரிக்கை! - Champions Trophy Cricket 2024

ABOUT THE AUTHOR

...view details