சென்னை:தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, விளையாட்டுத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களும் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியார், அலை சருக்குப் போட்டி, ஃபார்முலா 4 கார் பந்தயம் உள்ளிட்ட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜூனியர் தெற்காசியா தடகள் போட்டியும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலத்தீவு உட்பட 7 நாடுகளில் இருந்தும் 210 வீரர், வீராங்கனைகள் 28 பிரிவு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தினமும் மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இந்த போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய அணி சார்பில் 27 பெண் வீராங்கனைகள் உட்பட 58 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,1,500 மீட்டர், 3,000 மீட்டர், 110 மீட்டர் தடைஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 13 பிரிவிகளில் உள்ள போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தற்போது இந்த சர்வதேச தடகள போட்டியானது 1995ஆம் ஆண்டிற்குப் பின் 29 ஆண்டுகள் கழித்து நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ்நாடு தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (SAAF JUNIOR ATHLETIC CHAMPIONSHIP) போட்டியை இந்திய தடகள் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசுடன் இணைந்து நடத்துவதில் மகிழ்ச்சி. இந்த சாம்பியன்ஷிப் போட்டி செப்டம்பர் 11 முதல் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.