அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டம் இன்று (மே 10) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் 4வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக இன்று சுப்மன் கில்லுடன், சாய் சுதர்சன் களம் இறங்கினார். பலமாக கருதப்பட்ட இந்த கூட்டணி அதை நிருபிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது.
ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் அடித்து சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். அணியின் பலம் வாய்ந்த பந்து வீச்சாளராக கருதப்படும் துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோராலேயே இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியவில்லை. பார்ட்னர்ஷிப், முதலில் 100 ஆனது, பிறகு 150, 200 என எகிறியது.