ETV Bharat / entertainment

ஆர்ட் படங்களிலிருந்து வேறுபட்ட பக்கா கமர்ஷியல் படம் - யாஷின் ’டாக்சிக்’ படத்தை இயக்கும் கீது மோகன்தாஸ்! - GEETU MOHANDAS DIRECT YASH

Toxic Director Geetu Mohandas: டாக்சிக் இயக்குநர் கீது மோகன்தாஸ் யார், அவர் என்னென்ன படங்கள் எடுத்துள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

கீது மோகன்தாஸ், யாஷ்
கீது மோகன்தாஸ், யாஷ் (Credits: KVN Productions X page, ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 8, 2025, 9:04 PM IST

Updated : Jan 9, 2025, 9:11 AM IST

சென்னை: நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ’டாக்சிக்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கேஜிஎஃப்' (KGF) திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்தார். கன்னட சினிமாவின் வளர்ச்சிக்கு 'கேஜிஎஃப்' திரைப்படம் முக்கிய பங்கு வகித்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக யாஷ் நடிக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. பல இயக்குநர்களிடம் யாஷ் கதை கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ’டாக்சிக்’ (TOXIC) திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடிகர் யாஷின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு Toxic: Birthday Peek என்ற ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ’டாக்சிக்’ படம் எப்படியாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ ப்ரோமோ அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த ப்ரோமோ வீடியோவைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸ் மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ப்ரோமோ வீடியோவிலேயே நடிகர் யாஷை இவ்வளவு ஸ்டைலிஷாக மாஸாக காட்டிய கீது மோகன்தாஸ் யார், அவர் என்னென்ன படங்கள் எடுத்துள்ளார் என ரசிகர்கள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த கீது மோகன்தாஸ் ஆரம்பத்தில் நடிகையாகத் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். கீது மோகன்தாஸ் 1986ஆம் ஆண்டு வெளியான ’ஒன்னு முதல் பூஜ்யம் வரே’ (Onnu Muthal Poojaym Vare) எனும் மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மூன்று படங்களில் மம்முட்டியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழில் 1988ஆம் ஆண்டு வெளியான ’என் பொம்முக்குடி அம்மாவுக்கு’ எனும் திரைப்படத்தில் இவர் நடித்த ’டின்னு’ எனும் குழந்தை கதாபாத்திரம் எளிதில் மறக்க முடியாதது.

இந்த படத்தில் சத்யராஜ், சுஹாசினி, ரகுவரன், ரேகா என அப்போதைய முக்கியமான நடிகர்களும் நடித்திருந்தனர். மலையாள இயக்குநரான ஃபாசில் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு கீது மோகன்தாஸ் தனது 19வது வயதில் மோகன்லாலின் ’லைஃப் இஸ் பியூட்டிபுல்’ (Life Is Beautiful)திரைப்படத்திலிருந்து முழுநேர நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து ’தென்காசிப்பட்டணம்’, ’கண்ணகி’, ’பகல்பூரம்’, ’முல்லவள்ளியும் தேன்மாவும்’ என தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் கமல்ஹாசன் தயாரித்த ’நள தமயந்தி’ திரைப்படத்திலும் பிரகாஷ் ராஜ் தயாரித்து கே.பாலச்சந்தர் இயக்கிய ’பொய்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2004ஆம் ஆண்டு வெளியான ’அகலே’(Akale) திரைப்படத்திற்காக கேரள மாநில சிறந்த நடிகை விருதை பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு வெளியான ’நம்மல் தம்மில்’ மலையாளப்படத்துடன் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் கீது மோகன்தாஸ். 2009ஆம் ஆண்டுடன் நடிப்பதை நிறுத்திய கீது மோகன்தாஸ், அதே ஆண்டு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து ’கேள்க்குன்னுண்டோ’(Kelkkunnundo)எனும் தனது முதல் குறும்படத்தை இயக்கினார். இந்திய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றது இக்குறும்படம். இப்போதும் யூடியூப்பில் இக்குறும்படத்தை பார்க்கலாம்.

அதன்பிறகு 2013ஆம் ஆண்டு நாவாசூதின் சித்திக், கீதாஞ்சலி ஆகியோர் நடித்த ’லையர்ஸ் டைஸ்’ (Liar's Dice) எனும் ஹிந்தி படத்தை இயக்கினார். ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைக்கிராமம் ஒன்றிலிருந்து தனது கணவனைத் தேடி டெல்லிக்கு தன் குழந்தையுடன் செல்லும் பெண்ணைப் பற்றிய கதையாக இந்த படம் அமைந்திருக்கும். விளிம்பு நிலை தொழிலாளர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை மிகவும் யதார்த்தமாக இந்த திரைப்படத்தை உருவாக்கியிருப்பார் கீது மோகன்தாஸ். இத்திரைப்படம் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் அதிகமான விருதுகளை அள்ளி குவித்தது. இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு என இரு பிரிவுகளில் தேசிய விருது அளிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற 87வது ஆஸ்கர் விருது விழாவிற்கு சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்பட பிரிவில் இந்தியாவின் சார்பாக ’லையர்ஸ் டைஸ்’ (Liar's Dice) அனுப்பப்பட்டது. கடைசியாக 2019ஆம் ஆண்டு கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான ’மூத்தோன்’ திரைப்படமும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. லக்‌ஷத்தீவில் இருந்து காணாமல் போன தனது அண்ணனைத் தேடி செல்லும் பதின்பருவ பையனைப் பற்றிய கதையாக விரியும் இந்த ’மூத்தோன்’ திரைப்படம். இத்திரைப்படமும் மிக யதார்த்தமான மிகவும் கனமான அடர்த்தியான கதை சொல்லல் முறையில் இயக்கப்பட்டிருக்கும். எந்தவித கமர்ஷியல் விஷயங்களுக்கும் இடம் தராமல் இவ்விரு படங்களையும் இயக்கியிருப்பார் கீது மோகன்தாஸ்.

இதையும் படிங்க: கோடை விடுமுறைக்கு வெளியாகும் சூர்யாவின் ’ரெட்ரோ’... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாளத் திரைப்படங்களுக்குரிய அழகியலைத் தாண்டி மிக கனமான அடர்த்தியான கதைகளை இயக்கிய கீது மோகன்தாஸ், ’கேஜிஎஃப்’ போன்ற மிகப்பெரிய கமர்ஷியல் திரைப்படத்தைக் கொடுத்த யாஷுடன் இணைந்திருப்பதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கீது மோகன்தாஸின் கதையில் யாஷைப் பார்க்க போகிறோமா? இல்லை யாஷின் மாஸ் மசாலா படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறாரா? என கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் இருவரது திரைப்படங்களும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளன. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Last Updated : Jan 9, 2025, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.