பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. நாளையுடன் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் நிறைவு பெற உள்ள நிலையில், கடைசி கட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் Hokato Hotozhe Sema வெண்கலம் வென்று சாதனை படைத்தார். ஆடவருக்கான F57 பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் Hokato Hotozhe Sema 14.65 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலம் வென்றார். நாகாலாந்து மாநிலம் திம்மபூர் பகுதியைச் சேர்ந்த Hokato Hotozhe Sema, பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் அந்த மாநிலத்தின் சார்பில் கலந்து கொண்ட ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
40 வயதான Hokato Hotozhe Sema முன்னதாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மிரீன் சவுக்கிபால் பகுதியில் பணியில் ஈடுபட்ட போது கண்ணிவெடி வெடித்ததில் தனது இடது காலை இழந்தார். இருப்பினும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் தனது கேரியர் பெஸ்டடாக பாரீஸ் பாராலிம்பிக்சில் 14.65 மீட்டர் தூரத்திற்கு வீசி Hokato Hotozhe Sema வெண்கலம் வென்று உள்ளார். இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற பாரா விளையாட்டிலும் Hokato Hotozhe Sema வெண்கலம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானை சேர்ந்த யாஷின் கோஷ்ரவி 15.96 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். 31 வயதான யாஷின் இரண்டு முறை பாரா உலக சாம்பியன், மற்றும் ஹாங்சோ பாரா விளையாட்டில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. பிரேசிலை சேர்ந்த தியகோ தாஸ் சான்டோஸ் 15.06 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரர் ரானா சோமன் 14.07 மீட்டர் தூரம் எறிந்து 5வது இடம் பிடித்து பதக்கத்தை கைப்பற்று வாய்ப்பை தவறவிட்டார். ரானா சோமன் ஹாங்சோ பாரா விளையாட்டு தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பதக்க பட்டியலில் தற்போது இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்று பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:சிக்கலில் சிக்கிய வினேஷ் போகத், பஜ்ரங் புனியா! கிடுக்குப்பிடி போட்ட ரயில்வே! - Railway issue Notice Vinesh phogat