அகமதாபாத்:ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று முடிந்தன. அந்த வகையில், ஐபிஎல் தொடரின் 72வது போட்டியான எலிமினேட்டர் போட்டி, இன்று (மே 22) அகமதாபாத் மாநிலம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக விராட் கோலியும், டு பிளெசிஸ் களம் இறங்கினர். 2வது ஓவரில் கோலி தனது முதல் பவுண்டரியை விளாச, டு பிளெசிஸ்-ம் தனது முதல் சிக்ஸை விளாசினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பில் அணிக்கு ரன்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போல்ட் வீசிய அசத்தலான பந்தில் டு பிளெசிஸ் அவுட் ஆக, கேமரன் கீரின் களத்தில் இறங்கினார்.
பவர் ப்ளே முடிவில் பெங்களூரு அணி 50-1 என்ற கணக்கில் விளையாடியது. ஃபெரீரா பிடித்த அருமையான கேட்சில் கோலி அவுட் ஆனார். பின் படிதார் களம் கண்டார். 13வது ஓவரில் பெங்களூரு அணிக்கு மளமளவென மேலும் இரு விக்கெட்டுகள் சரிந்தன.
களத்தில் படிதார் - லோமரோர் ஜோடி இருந்தனர். 13 ஒவர் முடிவில் பெங்களூரு அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் அவேஷ் கான் வீசிய பந்தில் படிதார் அவுட் ஆக, தினேஷ் கார்த்திக் களம் கண்டு வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், நிதானமாக விளையாடிய லோமரோர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, களத்தில் கரன் ஷர்மாவும், ஸ்வப்னில் சிங் விளையாடினர். 20 ஓவர் முடிவிற்கு 172 ரன்களை பெங்களூரு அணி குவித்தது.
இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக படிதார் 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும், லோமரோர் 32 ரன்களும் குவித்தனர். எதிரணியில் பந்து வீசிய அவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும், போல்ட், சந்தீப் ஷர்மா, சாஹல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:16 ஆண்டுகால கனவை நனவாக்குமா ஆர்சிபி? எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்! - RR Vs RCB Eliminator