தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2024: டெல்லி அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவிப்பு - ரோகித் சர்மா புது சாதனை! - Rohit Sharma 1000 Runs - ROHIT SHARMA 1000 RUNS

MI vs DC: டெல்லி அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவித்து ரோகித் சர்மா புது சாதனை படைத்தார். அந்த அணிக்கு எதிராக 34 ஆட்டங்களில் ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை ரோகித் சர்மா எட்டி உள்ளார்.

Rohit Sharma
Rohit Sharma

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 4:13 PM IST

மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.7) 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் இன்னிங்சை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி விளாசி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ரோகித் சர்மா க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

முன்னதாக 23 ரன்கள் குவித்த போது ரோகித் சர்மா புது மைல்கல் படைத்தார். டெல்லி அணிக்கு எதிரான ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற்றார். டெல்லி அணிக்கு எதிராக இதுவரை 34 ஆட்டங்களில் விளையாடி உள்ள ரோகித் சர்மா இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.

இந்த வரிசையில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். டெல்லி அணிக்காக 28 ஆட்டங்களில் விளையாடி உள்ள விராட் கோலி ஆயிரத்து 30 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அதேநேரம், டெல்லி அணிக்கு எதிராக மற்றொரு சாதனையையும் ரோகித் சர்மா படைக்க உள்ளார்.

டெல்லி அணிக்கு எதிராக மட்டும் 46 சிக்சர்களை அடித்து உள்ள ரோகித் சர்மா, இன்னும் நான்கு சிக்சர்களை அடித்தால் அந்த அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை பெறுவார். டெல்லி அணிக்கு எதிராக மட்டும் ரோகித் சர்மா இதுவரை 14 அரை சதங்கள் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

8 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் குவித்து உள்ளது. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 26 ரன்களும், கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யாவும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க :செஸ் கேண்டிடேட்: 3வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி! - Chess Candidates 2024

ABOUT THE AUTHOR

...view details