தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"ரோகித் தனது attitude-ஐ மாற்றிக் கொள்ள வேண்டும்"- தமிழக வீரர் சொல்வது சரியா? - DINESH KARTHIK ON ROHIT SHARMA

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் டெக்னிக் குறித்து முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Rohit Sharma (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 4, 2024, 7:23 PM IST

ஐதராபாத்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் பார்ம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சித்து உள்ளார். இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

மொத்தம் ஆறு இன்னிங்ஸ்களில் இருவரும் தலா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து இருந்தனர். மேலும் கடைசி பத்து டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இருவரது பேட்டிங் மிகவும் சுமாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 இன்னிங்ஸ்களில் விராட் கோலி மொத்தம் 192 ரன்களும், ரோகித் சர்மா 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.

தன்னம்பிக்கை இல்லாத ரோகித் சர்மா:

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெள்ளைப் பந்து பார்மட் கிரிக்கெட்டில் அதிரடியான துவக்கத்தை தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதை அப்படியே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் கொண்டு வர முயற்சி செய்கிறார். ஆனால் அவருடைய அந்த அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிவரக்கூடியதாக இல்லை. இந்திய அணிக்கு தற்போது இதுவே பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

மேலும் ரோகித் சர்மா தன்னுடைய தற்காப்பு பேட்டிங்கில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அதிரடியாக ஆடச் சென்று விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார் என்ற விமர்சனங்கள் வெளி வரத் தொடங்கி உள்ளன. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் அணுகுமுறை குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார்.

ரோகித் சர்மா இதை செய்யவில்லை:

இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், "ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது அவர் தன்னுடைய பேட்டிங் டெக்னிக் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் ரோகித் சர்மா அதைச் செய்யவில்லை. அடித்து விளையாடுவது என்பது ஒரு ஆப்ஷன் மட்டுமே. அது பேட்டிங் டெக்னிக் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே சரி வரும்.

தடுத்து விளையாடியோ அல்லது மென்மையான ஷாட்டுகள் மூலமோ ஆட்டம் இழந்து விடலாம் என்று அவர் நினைப்பதால், அவர் அதிரடியாக விளையாட நினைக்கிறார். இதன் காரணமாக எல்லா பந்தையும் அதிரடியாக விளையாடச் சென்றால் அது பெரிய ஆபத்தை உருவாக்கக் கூடியதாக மாறுகிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு இது சரி வரலாம், ஆனால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிவராது. எனவே தன்னுடைய பேட்டிங் டெக்னிக்கை நம்பி விளையாட வேண்டும்" என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வெளியானது ஐபிஎல் மெகா ஏலம் தேதி! எப்ப தெரியுமா? IPL Mega Auction Date!

ABOUT THE AUTHOR

...view details