தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தேசிய விளையாட்டு தினம்: விளையாட்டின் மூலம் உலகை ஒன்றிணைக்க பாடுபடுவோம்! - National Sports Day 2024 - NATIONAL SPORTS DAY 2024

நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் மேஜர் தயான் சந்த் மற்றும் பிற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும் கருதப்படுகிறது.

Etv Bharat
National Sports Day (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Aug 29, 2024, 5:31 AM IST

ஐதராபாத்: நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டாடவும், இந்திய விளையாட்டு வீரர் வீராங்கனைகளை போற்றும் விதமாகவும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாட்டில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்துக்கும் இன்றைய நாளில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இன்றைய நாளில் இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த்தின் 113வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்திய ஹாக்கி ஜாம்பவான்:

இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அகமதாபாத்தில் ஒரு ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை சமேஷ்வர் சிங்கைப் போலவே, அவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். மேலும் அவர் அங்கு விளையாட்டை விரும்பினார். இந்திய ஹாக்கி ஜாம்பவானின் இயற்பெயர் தியான் சிங், ஆனால் அவர் இரவு நேரங்களில் நிலவு வெளிச்சத்தில் மட்டுமே பயிற்சி செய்ததால் அவரது அணியினர் அவருக்கு தியான் சந்த் என்று பெயரிட்டனர்.

இந்திய ஹாக்கி அணியில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி 400க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து உள்ளார் தயான் சந்த். மேலும், மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி பதக்கங்களை வென்று குவித்துள்ளார். அவரது புகழை நினைவுகூறும் வகையில் டெல்லியில் உள்ள தேசிய ஹாக்கி ஸ்டேடியம் 2002ஆம் ஆண்டு மேஜர் தயான் சந்த் ஹாக்கி ஸ்டேடியம் என மறுபெயரிடப்பட்டது.

இந்திய ஹாக்கிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ஹாக்கி வீரர் மட்டுமின்றி, பயிற்சியாளராகவும் தயான் சந்த் பின்னாட்களில் களமிறங்கினார். பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் தலைமை பயிற்சியாளராக தயான் சந்த் இருந்தார். மேலும், இந்திய ஹாக்கி ஜாம்பவான் பெயரில் மேஜர் தயான் கேல் ரத்னா விருது ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சாதிக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுகிறது.

தேசிய விளையாட்டு தினத்தின் தீம்:

2024 ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு தினத்தின் கருப்பொருள் 'ஊக்குவிப்பு மற்றும் அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களுக்கான விளையாட்டு' என்பதாகும். தனிநபர்களை ஒன்றிணைப்பதற்கும் சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக விளையாட்டின் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.

தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்:

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பொதுமக்கள் வெளிப்புற விளையாட்டுகளில் பங்கேற்குமாறு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்தில் பொது மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தேசிய விளையாட்டு தினத்தில் ஃபிட் இந்தியா இயக்கம்:

2019 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தன்று இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஃபிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டு இயங்குகிறது. இந்த இயக்கம் தனிநபர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் உடல் செயல்பாடு மற்றும் விளையாட்டுகளை இணைக்க ஊக்குவிக்கிறது. சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க:பிக்கில் பால் விளையாடுவதால் இவ்வளவு நன்மையா? சமந்தாவின் தேர்வு பெஸ்ட் தான் போல? - Pickle ball Game Health Benefits

ABOUT THE AUTHOR

...view details