தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னைக்கு 142 ரன்கள் வெற்றி இலக்கு! சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே அபார பந்துவீச்சு! - IPL 2024 CSK vs RR Match Highlights - IPL 2024 CSK VS RR MATCH HIGHLIGHTS

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 142 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தன் ராயல்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

Etv Bharat
IPL CSk vs RR (Photo Credit: IANS Photos)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 5:18 PM IST

சென்னை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.12) மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 61வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணியின் இன்னிங்சை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 43 ரன்களை சேர்த்தனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் சிமர்ஜித் சிங் பந்துவீச்சில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் நீண்ட நேரம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதே சிம்ர்ஜித் சிங் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதே சிம்ர்ஜித் சிங் ஓவரில் 15 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். சென்னை அணி பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக பந்துவீசி ராஜஸ்தான் வீரர்களை நிலை குழையச் செய்தனர். குறிப்பாக சிமர்ஜித் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் டாப் பேட்டிங் வரிசையை சீர்குழைத்தார்.

அதேபோல் மகேஷ் தேக்‌ஷேனாவும் 4 ஓவர்களில் வெறும் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இப்படி சென்னை வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொண்டு ராஜஸ்தான் வீரர்களால் பேட்டிங் செய்ய முடியவில்லை. கடைசி ஓவர்களில் ரியன் பராக் மற்றும் துருவ் ஜூரல் மட்டும் துரித ஆட்டத்தின் மூலம் ரன்களை குவித்தனர்.

கடைசி ஓவரில் அபாரமாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே அந்த ஒவரில் துருவ் ஜூரல் (28 ரன்), சுபாம் துபே (0 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணி தரப்பில் துஷார் சிமர்ஜித் சிங் 3 விக்கெடுகளும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 142 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க:கிராண்ட் செஸ் டூர்; உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா.. 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! - Praggnanandhaa

ABOUT THE AUTHOR

...view details