பாரீஸ்: 33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.31) மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, எஸ்டோனிய வீரா வீராங்கனை கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து எஸ்டோனிய வீராங்கனைக்கும் கடும் நெருக்கடி கொடுத்தார்.
பிவி சிந்துவின் தடுப்பு ஆட்டத்தால் எஸ்டோனிய வீராங்கனையால் மேற்கொண்டு புள்ளிகளை சேகரிக்க முடியவில்லை. இதனிடையே முதல் செட்டை 21-க்கு 5 என்ற கணக்கில் பிவி சிந்து கைப்பற்றினார். தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட எஸ்டோனிய வீராங்கனை பதிலடி கொடுக்கத் தொடங்கினார்.
இதனால் இரண்டாவது செட் கடும் நெருக்கடியுடன் விறுவிறுப்பாக நகர்ந்தது. மாறி மாறி இருவரும் புள்ளிகளை சேகரிப்பதில் தீவிரமாக இருந்தனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. இருப்பினும் அபாரமாக விளையாடிய சிந்து இரண்டாவது செட்டையும் அசத்தலாக கைப்பற்றினார்.
இறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து 21-க்கு 5, 21-க்கு 10 ஆகிய நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த தோல்வியின் மூலம் எஸ்டோனிய வீராங்கனையின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய் வெளியேறினார். ஆடவர் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் லக்சயா சென், இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டு விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா, பெலாரஸ்க்கு விதித்த தடை.. இஸ்ரேலுக்கு இல்லாதது ஏன்? சர்வதேச அரசியல் கூறுவது என்ன? - Paris Olympics 2024