பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நாளை (ஆக.4) மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டன் (இங்கிலாந்து) அணியை எதிர்கொள்கிறது.
குரூப் பி பிரிவில் இடம் பெற்று உள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய வீரர்கள் வரலாறு படைத்தனர்.
இந்நிலையில் நாளை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி எப்படியாவது தங்க பதக்கம் வெல்லும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெண்கலப் பதக்கமே கிடைத்தது. அதனால் இந்த முறை இந்திய வீரர்கள் எப்படியாவது தங்கம் வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆசை கொண்டு உள்ளனர்.
காலிறுதி ஆட்டம் எப்படி நடக்கிறது:
1.ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை, ஏ பிரிவில் முதலிடம் பிடித்த ஜெர்மனி, பி பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்த அர்ஜென்டினாவை எதிர்த்து காலிறுதியில் விளையாடுகிறது.