தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

ETV Bharat / sports

ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து வைத்த நீடா அம்பானி! அண்டிலியா வீட்டில் ஒரு விசிட்! - Olympic Athletes Nita Ambani house

மும்பையில் உள்ள அம்பானி வீட்டில் வைத்து பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

Etv Bharat
Nita Ambani Honours Paris Olympic, Paralumpic Stars (ANI)

மும்பை:பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர்களில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு ரிலையன்ஸ் நிறுவன தொழிலதிபரும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுபினருமான நீடா அம்பானி மும்பையில் உள்ள தனது பிரம்மாண்டா அண்டிலியா வீட்டில் வைத்து விருந்து வைத்தார்.

ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்ற ஏறத்தாழ 140 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். United in Triumph (வெற்றியின் ஐக்கியம்) என்ற தலைப்பில் இந்த விழா நடைபெற்றது. ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்க வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்த விழாவில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கி வீரர் சரபோஜித் சிங், பாராலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற நவதீப் சிங், முரளிகந்த் படேகர், தீபா மாலிக் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நீடா அம்பானி, "ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர்களில் பங்கேற்று விளையாடிய அனைத்து வீரர், வீராங்கனைகளும் ஒரே இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களால் ஒட்டுமொத்த நாடும் நாட்டு மக்களும் பெருமை கொள்கிறோம். நாட்டுக்காக சர்வதேச அரங்கில் ஜொலித்த அனைவருக்கும் மரியாதை செய்ய உள்ளோம். ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக, United in Triumph ஒரு இயக்கமாக மாற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும், பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர்களில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை நீடா அம்பானி கவுரவப்படுத்தினார். கடந்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்தியா 1 வெள்ளி 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது. அதேபோல் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தனர்.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரான வங்கதேச டி20 அணி அறிவிப்பு! ஷகிப் அல் ஹசன் இடத்தை நிரப்பப் போகும் அந்த வீரர் யார்? - Bangladesh announce T20I squad

ABOUT THE AUTHOR

...view details