நியூசிலாந்து:தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்.4 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடியது. முதல் இன்னிங்ஸ்ஸில் ரச்சின் ரவீந்திரா 2 சதங்களையும், வில்லியம்சன் 1 சதத்தையும் விளாசினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 511 என்கள் எடுத்தது.
அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸ்ஸை தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. களத்தில், கீகர் பீட்டர்சன் மற்றும் பெடிங்காம் ஆகிய இருவரும் இருந்தனர்.
மூன்றாவது நாளான இன்று(பிப்.6) கீகர் பீட்டர்சன் மற்றும் பெடிங்காம் சிறப்பாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். தொடர்ந்து 2 ஓவர்களுக்கு ரன் எதும் வரவில்லை. மூன்றாவது ஓவரில் 1 ரன் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணிக்கு கிடைத்தது. இந்த நிலை தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவைச் சந்தித்து கொடுப்பதற்கான வழியாகும்.
34வது ஓவரில், பெடிங்காம் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின், ருவான் டி ஸ்வார்ட் வந்த வேகத்தில் எல்பிடபிள்யூ(lbw) ஆனார். ஒரே ஓவரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிய 34 ஓவர் முடிவிற்கு தென்னாப்பிரிக்கா அணி 83-6 என்ற கணக்கில் இருந்தது.
35வது ஓவரை கீகன் பீட்டர்சன் - ஃபோர்ட்டின்(Fortuin) ஜோடி களம் கண்டனர். அடுத்தடுத்த 15 ஓவர்களுக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரிதாக ரன்கள் எதும் இல்லை. 50 ஓவர் முடிவிற்கு 119-6 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடிக் கொண்டிருந்தது.
52வது ஓவரில் ஃபோர்ட்டின் 52 பந்துகளுக்கு 1 பவுண்டரிகள் வீதம் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்தில் கீகன் பீட்டர்சன் உடன் ஒலிவியர் இணைய, அடுத்தடுத்த ஓவர்களை விளையாடினர். 65வது ஓவரில் கீகன் பீட்டர்சன் பெவிலியன் திரும்பிச் சென்றார். கீகன் பீட்டர்சன் 132 பந்துகளுக்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
72வது ஓவரில் சான்ட்னர் வீசிய பந்தில் மூர்கி போல்ட் ஆனார். பின்னர், டேன் பேட்டர்சன் களம் கண்டு சொற்ப ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 73 ஓவர்களுக்கு 162 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த கீகன்பீட்டர்சன் மட்டுமே 45 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியைச் சேர்ந்த மாட் ஹென்றி, சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், ஜேமிசன், ரச்சின் ரவீந்திரா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை விட 347 ரன்கள் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது. தொடக்க வீரர்களாக கான்வே மற்றும் டாம் லதாம் ஆகியோர் இறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்தில், கான்வே தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 5 வது ஓவரில் டாம் லாதம் எல்பிடபிள்யூ(lbw) ஆகி வெளியேறினார்.
பின்னர் களத்தில் வில்லியம்சன் வந்தார். வந்த வேகத்தில் முதல் பந்தை பவுண்டரி லைண்க்கு விளாசினார். நியூசிலாந்து அணி 5 ஓவர் முடிவிற்கு 14-1 என்ற கணக்கில் இருந்தது. அடுத்த 5 ஓவர்களுக்கு நியூசிலாந்து அணிக்கு சொற்ப ரன்கள் மட்டுமே கிடைத்தது. பின்னர், ருவான் டி ஸ்வார்ட் வீசிய 11வது ஓவரில் வில்லியம்சன் 3 பவுண்டரிகளை பறக்க விட்டார். 11வது ஓவர் முடிவிற்கு 39-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி விளையாடியது.
16வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 51-1 என்ற கணக்கில் இருந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை விட 400 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வில்லியம்சன் - கான்வே சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் 23 ஓவரில் வில்லியம்சன் டெஸ்ட் போட்டியில் தனது 34வது அரை சதத்தை பதிவு செய்தார். 23 ஓவர் முடிவிற்கு 77-1 என்ற கணக்கில் விளையாடியது.
அடுத்த 4 ஓவர்களுக்கு நியூசிலாந்து அணிக்கு சொற்ப ரன்களே கிடைக்க, 30வது ஓவரில் கான்வே அவுட் ஆனார். இந்த போட்டியில் கான்வே 68 பந்துகளுக்கு 1 சிக்ஸ் வீதம் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், வில்லியம்சன் உடன் ரச்சின் ரவீந்திரா இணைந்து இருவரும் விளையாடினர். 31 ஓவர் முடிவிற்கு 106-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி இருந்தது. 37வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா நீல் பிராண்ட் பந்தை சமாளிக்க முடியாமல் தனது ஆட்டத்தை இழந்தார். ரச்சின் ரவீந்திரா 26 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பின்னர், வில்லியம்சன் உடன் டேரில் மிட்செல் இணைய இருவரும் விளையாடி நிலையில், 39வது ஓவரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 500 ரன்களைக் கடந்து முன்னிலை வகிக்கிறது. 40வது ஓவரில் வில்லியம்சன் டெஸ்ட் டான் ஆனார். அதாவது, இந்த போட்டியில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
42வது ஓவரில் வில்லியம்சன் அவுட் ஆனார். 132 பந்துகளுக்கு 12 பவுண்டரிகள் 1 சிக்ஸ் வீதம் 109 ரன்கள் எடுத்தார். 42 ஓவர் முடிவிற்கு 173-4 என்ற கணக்கில் இருந்தது. அதன்பின் 43வது ஓவருடன் இன்றைய நாள் போட்டி முடிவுக்கு வந்தது. களத்தில் மிட்செல் மற்றும் டாம் ப்ளண்டெல் ஆகியோர் உள்ளனர். இதன் மூலம், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 528 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க:இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!