ஐதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ஒவ்வொரு ரசிகரிகளின் மனதில் நீங்கா நினைவுகளாக உள்ளது. 42 வயதான எம்எஸ் தோனி 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுக்கு போட்டார். அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்த தோனி, நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்து விட்டு விலகினார்.
மேலும், கால் மூட்டு வலி காரணமாக மிடில் ஆர்டர் வரிசையில் இறங்கி வந்த தோனி, தனது ஆர்டரை மாற்றிக் கொண்டு 6 அல்லது 7வது வீரர் வரிசையில் இறங்கத் தொடங்கினார். இப்படி ஒவ்வொரு ஆண்டு கிரிக்கெட்டை விட்டு படிப்படியாக விலகி வரும் தோனி, 2025 ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவர் ஓய்வை அறிவிப்பாரோ என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அவர் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் அதேவேளையில், கேப்டன் கூல் பொது வெளியில் கூலாக அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தற்போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இருக்கும் தோனி, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சாலையோர தாபாவில் தோனி தனது நண்பர்களுடன் உணவருந்தி உள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்திய அணியில் பல அறிமுக வீரர்கள் ஜொலிக்க காரணமாக இருந்தவர் எம்எஸ் தோனி. முன்னதாக இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எம்எஸ் தோனி என்பது நண்பரோ, சகோதரரோ கிடையாது, குரு போன்றவர் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குழந்தைப் பருவத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை பார்த்து வளர்ந்ததாகவும், இந்திய அணிக்கு அவர் தொடக்க ஓவர்களை வீசி வந்த நிலையில், தன்னை முதல் முறை மகேந்திர சிங் தோனி அழைத்து ஆசிய கோப்பையின் லீக் ஆட்டத்தில் முதல் ஓவரை வீசுமாறு கூறிய தருணத்தை தன்னால் மறக்க முடியாது என்றும் கலீல் அகமது கூறினார்.
இதையும் படிங்க:ஐசிசியின் தலைவராகும் ஜெய்ஷா? இவர் தான் முதல் இந்தியரா? எப்படி தேர்தல் நடக்கும்? - ICC Chairman