பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் நடைபெற்ற T63 ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். 1.85 மீட்டர் உயரத்தை தாண்டி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதன் மூலம் இவர் பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்ற சாதனை வீரராக உருவெடுத்துள்ளார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தட்டியிருந்தார்.