ஐதராபாத்:இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் எம்எஸ் தோனி விளையாடியது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று என்று கலீல் அகமது தெரிவித்து உள்ளார்.
2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் மூலம் இந்திய அணியின் அறிமுகமான கலீல் அகமது, தொடக்க ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோகித் சர்மா தலைமையின் கீழ் களமிறங்கிய கலீல் அகமது ஹாங் காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி தனக்கென தனி இடத்தை அனைவரது மனதிலும் பிடித்துக் கொண்டார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் தோனி தலைமையின் கீழ் கலீல் அகமது களமிறங்கினார். அந்த ஆட்டத்தில் தோனி தன்னை அழைத்து முதலாவது ஓவரை வீசக் கூறியதாகவும், தன் வாழ்நாளில் அந்த நாள் சிறப்புமிக்க நாளாக அமைந்ததாகவும் கலீல் அகமது தெரிவித்து உள்ளார்.
இதனிடையே யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த கலீல் அகமது, முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தன்னக்கு அண்ணனோ, நண்பரோ கிடையாது என்றும் குரு போன்றவர் என்று கூறியது தற்போது வைரலாகி வருகிறது. தொடர்ந்து பேசிய அவர், தனது சிறு வயது முதலே பந்துவீச்சாளர் ஆக வேண்டும் என்று விரும்பியதாகவும், ஜாகீர் கான் வளர்ந்து வருவதைப் பார்த்து, இந்தியாவில் இருந்து முதல் ஓவரை வீசும் பந்துவீச்சாளராக ஆக வேண்டும் என்று விரும்பினேன் என்றும் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பையில் தோனி தன்னை முதல் ஓவரை வீசச் சொன்னதாகவும் அவகாசம் கொடுத்தால் அவர் மனம் மாறிவிடலாம் என்று நினைத்துக் கொண்டு உடனேயே பந்துவீசச் சென்றதாகவும் கலீல் அகமது தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடிய உள்ள கலீல் அகமது 15 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 2019ஆம் ஆண்டு உலக கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்த போதிலும் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிராவோ முதல் சஞ்சு சாம்சன் வரை! கிரிக்கெட் வீரர்களிடம் இத்தனை சொகுசு கார்களா? - Cricket players Expensive cars