கோயம்புத்தூர்: கோவை பந்தய சாலையில் மக்கள் சேவை மையம் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கு பெற்று மாணவிகள் மத்தியில் பேசினார்.
முன்னதாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் வைத்தவாறு பேரணி மேற்கொண்டனர். தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நாம் பயன்படுத்தக்கூடிய கார்பனுக்கு சமமாக மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும். நாம் பயன்படுத்த கூடிய கார்பன் அளவை குறைக்க வேண்டும்.
![வானதி சீனிவாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-02-2025/23479578_1.jpg)
இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தனியார் கல்லூரியுடன் இணைந்து நடத்தி வருகிறோம். 7000 மாணவிகள் தினமும் ஒரு மணி நேரம் செல்போனை அணைத்து வைத்து விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர். தமிழக அரசை பற்றை விமர்சித்தால் பத்திரிக்கையாளர்கள் கூட தப்புவதில்லை. அவர்கள் மீது குண்டாஸ் போடும் அளவிற்கு அரசு உள்ளது. மோடியை விமர்சிக்காத ஊடகம் இல்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று தான் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. நீதிமன்றம் சென்று தான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்து உள்ளது.
டெல்லியில் வாக்குப்பதிவை பார்க்கும் போது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என தெரிகிறது. அங்கு காலையில் இருந்தே விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. ஈரோடு களத்தில் ஒற்றை ஆளாக திமுக நிற்கிறது என சொல்லிக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகள் இல்லாத போதும் மக்களை அடைத்து வைத்து தான் வருகின்றனர். மக்கள் வழங்கும் வாக்குகளை பார்க்கலாம்.
இதையும் படிங்க: தானோஸை மிஞ்சும் வில்லன்... 90ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோக்கள் தாங்குவார்களா...?
யார் அந்த சார்? என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டால், அது தமிழக அரசுக்கு தலைகுனிவு என தெரிவித்தார். வளர்ச்சியும் சுற்றுப்புற சூழலையும் ஒரு சேர கையாள வேண்டும். மாநில அரசுக்கு தேவையான உதவியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க உறுதுணையாக இருப்போம். கோவை மெட்ரோ பணிகள் மெதுவாக துவங்கி நன்றாக நடந்து வருகிறது.
நாளை வெளியாகும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பார்ப்பேன். நல்ல படம் என்றால் நிச்சயமாக சென்று பார்ப்பேன். நல்ல படம் என்று சொல்லுங்கள் நான் சென்று பார்க்கிறேன். தமிழக வெற்றி கழகத்தில் சாதி, பணம் அடிப்படையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு ஒரு கட்சி ஆரம்பித்த முதல் நடவடிக்கையில் இவ்வளவு குளறுபடிகள் என்றால் ஒரு அரசியல் இயக்கம் எவ்வாறு அடுத்த பரிணாமத்தை அடையும் என்பது கேள்வி குறியாக உள்ளது என்றார்.