ஹைதராபாத்: கணுக்காலில் நேரிட்ட காயம் காரணமாக ஐசிசி ஆண்கள் சாம்பியன் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டனால்டு கூறியுள்ளார்.
மேலும் பேசிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, "கம்மின்ஸ் விளையாட முடியாததால் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஆஸ்திரேலியா அணியின் அசத்தலான தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஐசிசி போட்டிகளில் கேப்டன் பதவி ஏற்று அணியை வழிநடத்துவார்.
மேலும் பாட் கம்மின்ஸுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதன் காரணமாகவும் இலங்கை சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்க மாட்டார். இதற்கிடையே, பார்டர் -கவாஸ்கர் கோப்பை போட்டியில் விளையாடியதன் காரணமாக அவரது கணுக்கால் வலி அதிகரித்து விட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்காத ஒரு நாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இலங்கையில் இருந்து வியாழக்கிழமை கிளம்புகின்றனர்.
பாட் கம்மின்ஸ் எந்தவித பந்து வீச்சிலும் ஈடுபடமுடியாத நிலையில் உள்ளார். எனவே அவர் போட்டிகளில் பங்கேற்பாரா என்று தெரியாத நிலை உள்ளது. எனவே, இப்போது எங்கள் அணிக்கு ஒரு கேப்டன் தேவை. ஸ்டீவ் ஸ்மித்,, டிராவிஸ் ஹெட் ஆகியோரிடம் நாங்கள் பேசியிருக்கின்றோம். சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியை கட்டமைக்கும் தருணத்தில் பாட் வீடு திரும்பி விட்டார். எனவே இரண்டு பேரில் ஒருவரை தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுப்போம்.
இதையும் படிங்க:’கடலுக்குள் ஓடுடா செல்லம்’ - மீனவர்கள் வலையில் சிக்கிய கடற்பசு… நெகிழ வைக்கும் வீடியோ!
அதே நேரத்தில் ஸ்டீவ் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினார். ஆனால், நான் கூறியபடி, கம்மின்ஸ் இல்லாத நிலையில் இந்த தருணத்தில் ஜோஸ் ஹாஸ்ல்வுட் இடுப்பில் காயம் காரணமாக அவர் அணியில் இடம் பெறுவாரா என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் போட்டியில் அவர் இடுப்பு காயம் நேரிட்டது அதில் இருந்து அவர் மீண்டு வருகிறார். இதன் காரணமாக இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறவில்லை. முழுவதுமாக அவர் குணம் ஆகவில்லை. எனவே இலங்கை போட்டியில் பங்கேற்கவில்லை.
கம்மின்ஸ், ஜோஸ் ஹாஸ்ல்வுட், ஆகிய இருவரும் ஆஸ்திரேலியா புரவிஷினல் சாம்பியன்ஸ் கோப்பை 2025 அணியில் இடம் பெற்றிருக்கின்றனர். அதே நேரத்தில் மிச்செல் மார்ஸ் இடம் பெறமாட்டார். ஆஸ்திரேலியா அணி மார்ஷ்க்கு பதிலாக யாரையும் நியமிக்கவில்லை. பியூ வெப்ஸ்டர் ஒரு நாள் போட்டியில் இடம் பெறுவார்,"என்றார்.