ETV Bharat / entertainment

தானோஸை மிஞ்சும் வில்லன்... 90ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோக்கள் தாங்குவார்களா...? - THE FANTASTIC FOUR MOVIE TEASER OUT

The Fantastic Four Reboot Teaser: 'தண்டர்போல்ட்ஸ்' படத்திற்கு பிறகு மார்வெல் தயாரிக்கும் ’The Fantastic Four’: First Steps படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

The Fantastic Four: First Steps Teaser
The Fantastic Four: First Steps Teaser (Credits: IndiaMarvel YT Channel)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 5, 2025, 4:17 PM IST

சென்னை: உலகம் முழுவதுமே சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு. ஒவ்வொரு நாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு பல்வேறு சூப்பர் ஹீரோ கதைகள் இருக்கின்றன. அவற்றை பெரிய திரையில் காண்பது என்பது தனி அனுபவமாக கருதுகின்றனர் ரசிகர்கள். அப்படியான சூப்பர் ஹீரோ கதைகளில் கோலோச்சும் நிறுவனம் மார்வெல்.

காமிக்ஸில் ஆரம்பித்து தற்போது சினிமா வரை மர்வெலுக்கென பிரேத்யகமான யுனிவர்ஸும் இருக்கிறது. அதனை மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (Marvel Cinematic Universe) என பெயர் கொண்டு அழைக்கின்றனர். 2008ஆம் ஆண்டு வெளியான ’அயர்ன் மேன்’ படத்திர்லிருந்து கடந்த 17 வருடங்களில் 34 திரைப்படங்கள் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வெளி வந்துள்ளன. அதேபோல் ஏரளமான வெப் சீரியஸ்களும் வெளிவந்துள்ளன.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த அதிரடியாக ’The Fantastic Four: First Steps' படம் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் டீசர் டிரெய்லர் நேற்று(பிப்.04) வெளியாகியுள்ளது. மார்வெல் ரசிகர்கள் மட்டுமல்லாது 90ஸ் கிட்ஸ் மத்தியிலும் இந்த டீசர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ’ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ சூப்பர் ஹீரோக்களை 90ஸ் கிட்ஸ் சிறு வயதிலேயே தமிழ் டப்பிங்கில் பார்த்து கொண்டாடியுள்ளனர். அந்த நினைவுகளோடு இந்த புதிய ’த ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ படத்தின் டிரெயிலரை ஒப்பிட்டு நாஸ்டால்ஜியாக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ’த ஃபெண்டாஸ்டிக் ஃபோர்' (The Fantastic Four First Steps) மாறியுள்ளது. இந்த ஃபெண்டாஸ்டிக் ஃபோர் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களைக் கொண்டு ஏற்கனவே 2005, 2007 ஆண்டுகளில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி அதிரி புதிரியான வரவேற்பை பெற்றது.

அதன் பின் மீண்டும் 2015 ஆம் ஆண்டு மீண்டும் Fantastic Four எடுக்கப்பட்டது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது மார்வெல் ஸ்டுடியோஸே சினிமாவாக உருவாக்கும் உரிமத்தை 20th Century Fox நிறுவனத்திடம் இருந்து பெற்று, அதே கதையை ரீபூட் செய்து, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைத்துள்ளனர்.

இத்தனை நாட்கள் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் மிஸ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த இந்த சூப்பர் ஹீரோக்கள் மீண்டும் மார்வெலுக்கே வந்துவிட்டனர். ’வாண்டா விஷன்’ வெப் சீரியஸை இயக்கிய மாட் ஷக்மன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ’த ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ திரைப்படம் ஜுலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

’ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. டீசரில் டாக்டர் ரிச்சர்ட்ஸ், சுயூ,பென், ஜானி என நால்வரும் விண்வெளியில் சிறிய விபத்தில் சிறப்பு ஆற்றல்கள் கிடைத்து, அதன் மூலம் சூப்பர் ஹீரோக்களாக மாறியதை பேசுகிறார்கள். அதனால் ஏற்பட்டிருக்கும் அகச்சிக்கல்களையும் சூப்பர் ஹீரோக்களாக எதிர்கொள்ள வேண்டிய வில்லன்களையும் ஒருசேர குடும்பமாக நால்வரும் எதிர்கொள்கிறார்கள் என்பதாக டீசர் நிறைவடைகிறது.

ரெட்ரோஃபியூச்சரிசம் (Retro futurism) பாணியில் உருவாக்கப்பட்ட உலகத்தில் இந்த கதை நடப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தில் கேலக்டஸ்தான் வில்லன் என்பதை டீசரிலேயே காட்டிவிட்டதால் மார்வெல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். காரணம், மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இதற்கு முன் சூப்பர் ஹீரோக்கள் பலரை பந்தாடிய பெரும் பலம் பொருந்திய வில்லனான தானோஸே இந்த கேலக்டஸ் முன்னால் ஒன்றுமில்லை.

இதையும் படிங்க: முதல் நாள் வசூலில் பீஸ்டை மிஞ்சுமா 'விடாமுயற்சி’?... அஜித் கரியரில் அதிகபட்ச வசூல்!

எனவே இப்படியான மிகப்பலம் பொருந்திய வில்லனை கொண்டு வந்துள்ளதால் அடுத்த சில ஆண்டுகளில் வரவுள்ள ’அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே’ (Avengers: Doomsday) உட்பட மார்வெல்லின் அடுத்த படங்களின் கதைகளோடு இதனை தொடர்புபடுத்தி ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். ஃபேன் தியரிகளை எழுத ஆரம்பித்துவிட்டனர். அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படத்தில் அயர்ன் மேன் ராபர்ட் டௌனி ஜுனியர்தான் டாகடர் டூம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமில்லாமல் இந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ’Captain America: Brave New World’ திரைப்படமும் மே 2ஆம் தேதி ’Thunderbolts’ திரைப்படமும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸிலிருந்து வெளிவரவுள்ளது. அதன் பிறகு ஜுலை 25ஆம் தேதியே ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படம் வெளியாகவுள்ளது. ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்திற்கு பிறகு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வரும் திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.