லக்னோ: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.30) லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறும் 48வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இனி வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டும் பிளே சுற்றில் மும்பை அணியால் தொடர முடியும்.
வலுவான நிலையில் உள்ள லக்னோ அணியுடன் இன்று மும்பை அணி மோதுகிறது. லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும். இதனால் மும்பை அணியின் வெற்றியை அதன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லக்னோ அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமடையும். இதனால் வெற்றிக்கு லக்னோ அணி கடுமையாக மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான விளையாடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.