லக்னோ: ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது. லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் டி காக் இரண்டு பவுண்டரி அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால் டி காக் நான்கு பவுண்டரி அடித்த நிலையில், 19 ரன்களுக்கு கலீல் அகமது பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார்.
அடுத்த களமிறங்கிய படிக்கல் 3 ரன்களுக்கு கலீல் பந்தில் அதேபோல் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்து வந்த வேகத்தில் பவுண்டரி அடித்த ஸ்டொய்னிஸ், 8 ரன்களுக்கு குல்தீப் பந்தில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் ராகுல் பொறுமையாக ரன்கள் சேர்த்தார். அவர் 39 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் பந்தில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஹூடா இஷாந்த் பந்தில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு 10 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய க்ருணால் பாண்டியா 3 ரன்களுக்கு அவுட்டாக 7 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து லக்னோ அணி திணறியது. அப்போது களமிறங்கிய பதோனி, அர்ஷத் கான் அணியை சரிவிலிருந்து மீட்டது. ஆயுஷ் பதோனி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதேபோல் அர்ஷத் கான் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
ஓரளவு எளிதாக சேஸ் செய்யக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே பொறுமையாக ஆடி வருகிறது. டேவிட் வார்னர் கையில் காயம் ஏற்பட்ட நிலையில் 8 ரன்களுக்கு யாஷ் தாகூர் பந்தில் போல்டானார். மறுபக்கம் ப்ரித்வி ஷா அதிரடியாக 22 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட்டானார். மூன்றாவது வீரராக களமிறங்கிய இளம் வீரர் மெக்கூர்க் அதிரடியாக 8 பந்து 16 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். டெல்லி அணி 6 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் போட்டிக்கு அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிராஸ்டடோ ஜோடி தகுதி! - 2024 Paris Olympics