ஐதராபாத்:2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மே மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மெகா ஏலத்தை முன்னிட்டு வீரர்கள் தக்கவைப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில், அதிகபட்சம் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்கவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 10 அணிகளும் தக்கவைப்பு வீரர்கள் குறித்த பட்டியலை நாளை (அக்.31) வெளியிட ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்ற தந்தை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரை கழற்றிவிட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
என்ன காரணம்?:
2014, 2016 ஆகிய ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா அணி கடந்த ஐபிஎல் சீசனில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொல்கத்தா அணியை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்றார். இவருக்கு உறுதுணையாக ஆலோசகர் கவுதம் கம்பீர், பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக சுனில் நரேன், ஆந்திரே ரஸ்செல், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்சித் ராணா ஆகியோரை தக்கவைக்க கொல்கத்தா அணி நிர்வாகம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.18 கோடி ஒப்பந்தம் அளிக்க முடியாது என்று அணி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கொல்கத்தா அணியில் இருந்து வெளியேற்றம்?: