தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"அப்பா ஏற்கனவே வெண்கலம் இருக்கு.. இந்த முறை தங்கம் வேணும்"- ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் குழந்தைகள் கட்டளை! - paris olympic 2024 - PARIS OLYMPIC 2024

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல வேண்டும் என கேரளாவில் ஒரு குடும்பம் பிரார்த்தனை செய்து வருகிறது. இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

Etv Bharat
File Photo: PR Sreejesh (AP)

By ETV Bharat Sports Team

Published : Aug 6, 2024, 3:09 PM IST

எர்ணாகுளம்:இந்திய ஹாக்கி அணி பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரைஇறுதி போட்டியில் இன்று இரவு 10.30 மணிக்கு ஜெர்மனியை எதிர்கொள்கிறது. அரைஇறுதியில் இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அதேநேரம் ஒட்டுமொத்த நாட்டை ஒப்பிடும் போது தென் மாநிலமான கேரளாவில் கூடுதலாக பிரார்தனையின் சப்தம் ஒலிக்கிறது. இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ், கேரளா மாநிலம் எர்ணாகுளம் அடுத்த பல்லிக்கரா, பரட்டு பகுதியைச் சேர்ந்தவர். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என ஸ்ரீஜேஷின் தந்தை பிவி ரவீந்திரன், தாய் உஷா, மனைவி அனிசியா, மகள் அனுஸ்ரீ மற்றும் மகன் ஸ்ரீயான்ஷ் என ஒட்டுமொத்த குடும்பபே பிரார்த்தனை செய்து வருகிறது.

ஸ்ரீஜேஷின் ஹாக்கி பயணம் குறித்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் அவரது தந்தை ரவீந்திரன் பேசுகையில், "இது ஸ்ரீஜேஷ்க்கு நான்காவது ஒலிம்பிக் போட்டியாகும். இதுவரை 5 இந்தியர்கள் மட்டுமே 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஸ்ரீஜேஷும் ஒருவர்.

இது அவருக்கு உண்மையிலேயே ஒரு மரியாதை. அவர் ஏற்கனவே ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், எனவே பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் அவர் ஓய்வு பெற வாழ்த்துகிறோம். ஸ்ரீஜேஷ் ஜி.வி.ராஜா விளையாட்டு பள்ளியில் சேர்ந்து விளையாடத் தொடங்கும் வரை எங்களுக்கு ஹாக்கி பற்றி தெரியாது.

நான் ஒரு விவசாயி. ஒரு விவசாயியாக இருந்ததால், அவரது விளையாட்டுக்கு தேவையான அனைத்து பொருட்கள், உபகரணங்கள் வாங்குவதற்கு சிரமப்பட்டேன். அதற்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவானது, அது என்னைப் போன்ற ஒரு விவசாயிக்கு பெரிய தொகை. இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு அவர் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதால், அது தங்கப் பதக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்ரீஜேஷின் தாய் உஷா கூறுகையில், "ஸ்ரீஜேஷ் விளையாடும் முழுப் போட்டியையும் பார்க்க எனக்கு தைரியம் இல்லை. தினமும் கோயிலுக்கு சென்று அவருக்காக பூஜை செய்து வருகிறேன். எங்கள் நண்பர்கள் என் மகனைப் பற்றி பேசும்போது, ​​நான் பெருமைப்படுகிறேன். அவருக்காகவும் இந்திய அணிக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

நாங்களும் பதற்றமாக உணர்கிறோம். முழு உலகமும் நமக்காக பிரார்த்தனை செய்யும் போது, ​​அவர் வெற்றி பெறுவார் என்பது உறுதி. அவருக்கும் இந்திய அணிக்கும் ஆதரவாக நிறைய மலையாள மக்கள் பாரிஸ் சென்றனர். மேலும் அவர்கள் மைதானத்தில் இருந்து கொண்டு நம் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவார்கள்" என்று கூறினார்.

தனது கணவர் தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்புவதையே அனைவரும் போல் தானும் விரும்புவதாக ஸ்ரீஜேஷின் மனைவி அனிசியா தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், "தனது ஓய்வு ஆட்டத்தில் சிறந்த வெற்றியை அடைவதை விட பெரிய மகிழ்ச்சி வேறில்லை. ஒலிம்பிக்கில் எந்த அணியையும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ஸ்ரீஜேஷ் எப்போதும் கூறுவார். ஸ்ரீஜேஷ் ஒரு பிட்னஸ் வெறியர். அவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவார். நான் அவரது ஓய்வுக்கான போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வார் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

தங்கள் தந்தை நிச்சயம் தங்கம் வெல்வார் என்பதில் துளியும் சந்தேகமில்லை என ஸ்ரீஜேஷின் இரண்டு குழந்தைகளும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இருவரும் கூறுகையில், தங்கள் தந்தை விளையாடும் போட்டியை தங்களது நண்பர்கள் பார்ப்பதாகவும், தங்களது தந்தைக்கு ஆதரவு அளிக்கும்படி நண்பர்களிடம் கோரியுள்ளதாகவும் இருவரும் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஏற்கனவே வெண்கலம் வாங்கி விட்டதால் இந்த முறை தங்கம் அல்லது வெள்ளி வாங்கி வருமாறு தங்களது தந்தைக்கு இரண்டு குழந்தைகளும் அன்பு கட்டளையிடுகின்றனர். ஸ்ரீஜேஷின் குடும்பம் தவிர்த்து ஒட்டுமொத்த கொச்சி மாவட்ட பல்லிகாரா பகுதியே அவரது வெற்றிக்காக காத்திருக்கிறது.

இதையும் படிங்க:பயற்சி பெற்றதோ ஜிம்னாஸ்டிக்கில்.. ஆனால் தங்கம் வென்றது துப்பாக்கி சுடுதலில்! யார் இந்த அட்ரியானா ருவானோ! - paris olympics 2024

ABOUT THE AUTHOR

...view details