திருவனந்தபுரம்:கேரளா கிரிக்கெட் லீக் தொடக்க விழா இன்று (ஆக.31) நடைபெற்றது. கேரளா கிரிக்கெட் லீக்கின் பிரான்ட் அம்பாசிடரான மோகன் லால் தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் கேரளா விளையாட்டுத் துறை அமைச்சர் வி அப்துரஹிமான், கோப்பையை அறிமுகப்படுத்தினார்.
விழாவில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜெயெஷ் ஜார்ஜ், செயலாளர் வினோத் எஸ் குமார், கேரள கிரிக்கெட் லீக் தலைவர் நாசர் மசான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 33 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 18ஆம் தேதி மொத்தம் ஆட்டங்களும் நடைபெற திட்டமிட்டுள்ளன.
மொத்தம் ஆறு அணிகள் தொடரில் கலந்து கொள்கின்றன. திருவனந்தபுரம் ராயல்ஸ், கொச்சி புளூ டைகர்ஸ், திருச்சூர் டைட்டன்ஸ், கேலிகட் குளோப்ஸ்டார்ஸ், கொல்லம் செய்லர்ஸ் மற்றும் ஆலப்பி ரிப்பிள்ஸ் ஆகிய ஆறு அணிகள் விளையாடுகின்றன. செப்டம்பர் 2ஆம் தேதி முதலாவது லீக் ஆட்டம் தொடங்குகிறது.