பாரீஸ்:உலகின் விளையாட்டு திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 4 முறை பதக்கம் வென்ற ஜமைக்கா நாட்டின் ஷெல்லி-ஆன் பிரேசர்-பிரைஸ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் நடப்பு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்ற ஷிக்காரிய ரிச்சர்ட்சன், பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடினார் செயின்ட் லுாசியாவின் ஜூலியன் ஆப்பிரட்.
குறிப்பாக பந்தய தூரத்தை 10.72 வினாடியில் கடந்து அனைவரையும் வியப்படையச் செய்தார். அமெரிக்க வீராங்கனை ஷிக்காரியா ரிச்சர்ட்சன் 16 வினாடிகள் பின் தங்கி தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் ஷிக்காரியா ரிச்சர்ட்சன் (10.87) வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஆன மெலிசா ஜெபர்ஸன் 10 புள்ளி 92 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். நான்காவது இடத்தை 10.96 வினாடிகளில் கடந்து பிரிட்டன் வீராங்கனை டேரில் நீதா பிடித்தார்.