குஜராத்: ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பேசிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, “இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட்டின் ஒப்பந்தம், கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.
ஆனால், டிராவிட் மற்றும் அவருடன் பணிபுரியும் துணை பயிற்சியாளர்களிடம், கடந்த தென் ஆப்பிரிக்கா தொடர் வரை பயிற்சியாளராக நீடிக்கும்படி கூறப்பட்டது. இந்நிலையில், ராகுல் டிராவிட் 2024 டி20 உலகக் கோப்பை வரை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிப்பது குறித்து, அவரிடம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர் தென் ஆப்பிரிக்கா தொடர், ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து தொடர் என டிராவிட் அடுத்தடுத்து பிஸியானதால், அவருடன் இது குறித்துப் பேச நேரம் கிடைக்கவில்லை. எனினும், ராகுல் டிராவிட் வரும் ஜூனில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார்.