லக்னோ: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று (மார்ச் 30) தொடரின் 11வது போட்டி லக்னோவின் எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதுவரை இத்தொடரில் பெங்களூரு அணி 3 போட்டிகளும், லக்னோ அணியை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் 2 போட்டிகள் விளையாடி உள்ளது.
லக்னோ அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட நிலையில், அதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இன்று நடைபெற்று வரும் போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
அதனால் வெற்றி முனைப்புடன் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான லக்னோ அணி களம் இறங்கி உள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணி இதுவரை இரண்டு போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.