சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக எங்களிடம் இருந்து பறிக்காது. அது இயற்கையாகவே காங்கிரஸ் தொகுதி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜனவரி 03) வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் நிர்வாகிகள் சீரமைப்பு மற்றும் மாற்றி அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகள் இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 15 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
இந்த மனுக்களை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டு, பின்பு நிர்வாகிகள் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்யப்படும். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் வரும் 7ஆம் தேதி, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உருவப்படங்களை திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து, வருகிற ஜனவரி 8 ஆம் தேதி கிராமந்தோறும் காங்கிரஸ் என்ற தலைப்பில், கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜய் குமார், சூரஜ் ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, அவர்களுக்கு எதிராக வீர முழக்கமிட்ட மன்னர் வீர பாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உறுதியுடன் நின்ற வீரமங்கை ராணி வேலு நாச்சியார் ஆகியோர்களின் பிறந்தநாள் இன்று… pic.twitter.com/gU6EHgTOFY
— Selvaperunthagai K (@SPK_TNCC) January 3, 2025
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம்!
எம்எல்ஏ பதவிகளுக்கு முன்னுரிமை:
மேலும், கிராம, நகர, பேரூராட்சி, மாநகராட்சி கமிட்டிகளை வலிமைப்படுத்தும் நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி, எம்எல்ஏ பதவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதியவர்களுக்கு கட்சியில் வாய்ப்பு அளிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும்.
" பொங்கல் திருநாளில் அரசு இந்த ஆண்டும் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வழங்க வேண்டும்."
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 3, 2025
- தலைவர் திரு கு. செல்வப்பெருத்தகை mla pic.twitter.com/P5yjmmzxDe
பொங்கலுக்கு ரூ.1000 வழங்க வேண்டும்:
பொங்கல் திருநாளில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு பணம் கொடுப்பார்கள். அதன்படி, இந்த ஆண்டும் குறைந்தபட்சம் அரசு ரூ.1,000 வழங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியின் செல்போன் கிடைத்துள்ளது. அந்த செல்போனை ஆய்வு செய்தாலே, "யார் அந்த சார்" என்று தெரிந்துவிடும். எந்த சாராக இருந்தாலும் அவர் மாட்டி கொள்வார். பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது.
வருகிற 8 ஆம் தேதி " கிராமந்தோறும் காங்கிரஸ்" என்ற அடிப்படையில் கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் டாக்டர் அஜோய்குமார் திரு.சுராஜ் ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். pic.twitter.com/U2iMdNJdz7
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 3, 2025
முன்னதாக, தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.