தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2024: தொடரை ஆறுதல் வெற்றியுடன் முடிக்குமா மும்பை இந்தியன்ஸ்? - MI VS LSG - MI VS LSG

IPL Today match: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

MI VS LSG தொடர்பான கோப்பு  புகைப்படம்
MI VS LSG தொடர்பான கோப்பு புகைப்படம் (credits- ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 3:24 PM IST

மும்பை:17வது ஐபிஎல் சீசனானது இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று (மே 16) நடக்கவிருந்த ஆட்டம் மழையால் ரத்து ஆனது. இதனால் சன்ரைசர்ஸ் அணி ஒரு புள்ளியை பெற்று மொத்தம் 15 புள்ளிகளுடன் மூன்றாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.நான்காவது இடத்திற்கான போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.கொல்கத்தா,ராஜஸ்தான் ஆகிய இரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறும் 67ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாட உள்ளது.இப்போட்டியானது மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துலங்குகிறது.

இதில், இதுவரை 13 போட்டிகள் விளையாடி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 13 போட்டியில் 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இருப்பினும் இவ்விரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இன்றைய ஆட்டத்தில் விளையாட உள்ளன.

நேருக்கு நேர்:இரு அணிகளும் இதுவரை மொத்தம் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றியையும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நான்கு வெற்றியையும் பெற்றுள்ளது.இந்த சீசனில் இரு அணிகளும் கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிட்ச் ரிப்போர்ட்:இந்த மைதானத்தில் இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காரைக்குடியில் சிஎஸ்கே கிரிக்கெட் பயிற்சி முகாம்: இளம் வீரர்களுக்கு மைக் ஹசியின் அறிவுரை என்ன? - Training Camp Initiated By Hussey

ABOUT THE AUTHOR

...view details