டெல்லி:நடப்பு ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜேக் ஃப்ரேசர் - பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆட தொடங்கினர். இதில் ஃப்ரேசர் 23 ரன்களுக்கு வெளியேற, மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான பிரித்வி ஷா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்களுக்கு வெளியேறினார்.
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் இணைந்து, சரிவிலிருந்த டெல்லி அணி மீட்டனர். இதில் அதிரடியாக விளையாடிய அக்சார் பட்டேல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் களமிறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரிஷப் பண்ட்வுடன் இணைந்து அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது டெல்லி. பொறுப்புடன் விளையாடி ரிஷப் பண்ட் 88 ரன்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
இதன் பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ். அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டன் சுப்மன் கில் - விருத்திமான் சாஹா ஆகியோர் களமிறங்கினர். இதில் 6 ரன்களுக்கு அவுட் ஆகி சுப்மன் கில் ஏமாற்றம் அளித்தார்.