தரம்சாலா:17வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெற உள்ளது.
இந்த தொடரில் தரம்சாலாவில் நடக்கும் முதல் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 5ல் வெற்றி 5ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
குறிப்பாக கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 3ல் தோல்வி 2ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதும் அடங்கும். சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமானால் மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
சிஎஸ்கேவில் பவுலிங்கில் மாற்றாம்:கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக துஷார் தேஷ்பாண்டே விளையாடவில்லை, அதே போல் தீபக் சஹார் கடந்த போட்டியில் ஒரு ஓவர் கூட முழுமையாக வீச முடியாமல் வெளியேறினார். முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கேதசம் திரும்பியுள்ளார்.