சென்னை: 'அமரன்' திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதை முன்னிட்டு இன்று படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த படம் 'அமரன்'. இத்திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. மறைந்த முன்னாள ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
அமரன் படத்தில் முகுந்த வரதராஜனின் காதல் வாழ்க்கை குறித்தும், ராணுவத்தில் அவர் சந்தித்த சவால்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பும் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையும் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக படம் பார்த்த நாள் முதல் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
50 Days of Unstoppable Pride, inspired by Heroes, Loved by Millions!
— Raaj Kamal Films International (@RKFI) December 19, 2024
Inspired by #Amaran, this narrative celebrates the courage and sacrifices of soldiers, highlighting their emotional strength and dedication to the love of our country, Jai Hind
➡️ https://t.co/EbraShRDGr… pic.twitter.com/WoIi9qbdxd
அமரன் படம் பார்த்த பார்வையாளர்களுக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் கனத்த இதயத்துடன் கண்ணீர் வரவைத்தது. தற்போது வரை திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை அமரன் திரைப்படம் உலக அளவில் 333.44 கோடியும், இந்திய அளவில் 219.82 கோடியும், தமிழ் மொழியில் மட்டும் 167.74 கோடியும் வசூல் செய்துள்ளது. அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் ஒரு மகுடமாக அமைந்துள்ளது.
இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் விஜய் நடித்த கோட் படத்திற்கு பிறகு அமரன் திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா நாட்டில் உள்ள நிலையில், அவர் இந்தியா வந்தவுடன் அமரன் திரைப்படத்திற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிகிறது.
இதையும் படிங்க: திருமணம் ஆன கையோடு தாலியுடன் பட புரமோஷனில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்; புகைப்படங்கள் வைரல்! - KEERTHY SURESH PHOTOS
இந்நிலையில் இன்று அமரன் திரைப்படம் வெளியாகி 50வது நாளை முன்னிட்டு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ மேஜர் முகுந்த் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது கால் தடத்தை மட்டும் கொண்டு உருவாக்கபப்ட்டுள்ளது. மேஜர் முகுந்த் பள்ளிக்கு சென்றது, ராணுவத்தில் சந்தித்த சவால்கள், கடைசியாக இறந்த பின் 'வானே வானே' என்ற எமோஷனலான பாடலுடன் முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.