ETV Bharat / state

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியா-இலங்கை நாடுகள் மனிதநேய அணுகுமுறையை மேற்கொள்வது ஏன்? - SOLVE FISHERMEN ISSUE

மனித நேயம் மற்றும் வாழ்வாதார அடிப்படையிலான அணுகுமுறையில் இருநாடுகளுக்கு இடையேயான மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது என்று இந்தியா, இலங்கை நாடுகள் முடிவு செய்திருப்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு விரிவாக அலசுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி-இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே
பிரதமர் நரேந்திர மோடி-இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே (Image credits-X@MEAIndia)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 5:36 PM IST

புதுடெல்லி: கடல் வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் இருநாடுகளின் மீனவர்களுக்கு இடையே எழுந்துள்ள பிரச்னைக்கு மனிநேய, வாழ்வாதார அடிப்படையிலான அணுகுமுறையை முன்னெடுப்பது என்று 16ஆம் தேதி இந்தியா-இலங்கை நாடுகள் ஏற்றுக் கொண்டிருப்பது முக்கியமான முன்னெடுப்பாகும்.

இலங்கைக்கு உதவி: பிரதமர் நரேந்திர மோடி-இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் நடந்த இருநாடுகளின் பிரநிதிகள் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து பரஸ்பரம் எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பது என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருநாடுகளின் மீனவர்கள் எதிர் கொள்ளும் வாழ்வாதார பிரச்னைகளை, தொடர்ந்து மனிதாபிமான முறையில் அணுகி தீர்வு காண்பது என்று இருநாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.கூட்டறிக்கையின்படி, பேச்சுவார்த்தை, ஆக்கபூர்வமான செயல்பாடுகள் வழியே நீண்டகால பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை அடைவது என்று இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இந்தியா-இலங்கைக்கு இடையேயான சிறப்பான உறவு நீடித்து வரும் நிலையில், இந்த விஷயங்கள் குறித்து தீர்வு காண தொடர்ந்து செயல்பாடுகள் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு இருநாடுகளின் தலைவர்களும் உத்தரவிட்டனர். பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், காரைநகர் படகுத் தளத்தை புனரமைத்தல் மற்றும் இந்திய உதவியுடன் மீன் வளர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இலங்கை மீன்வளத்துறையின் நீடித்த, வணிக ரீதியிலான முயற்சிகளுக்கு துணை நிற்கும் இந்தியாவுக்கு இலங்கை அதிபர் திசநாயகே நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இயந்திர இழுவைப் படகுகள் பயன்பாடு: இந்தியா-இலங்கை நாடுகளின் மீனவர்களுக்கு இடையேயான பிரச்னையானது சுற்றுச்சூழல் கவலைகள், வாழ்வாதார சவால்களுடன் தொடர்புடையது மட்டுமின்றி இருநாடுகளுக்கு இடையே அரசியல் உறவுகள், சமூக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியா-இலங்கை இடையே கடல் வழியே 22 கி.மீ தூரம் மட்டுமே இருப்பதால் பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுவது போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்திய மீனவர்கள் இயந்திர இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால், இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து மீனவர்களுக்கும் குறைவான மீன்களே கிடைக்கின்றன. மேலும் இலங்கை மீனவர்களின் படகுகளும் சேதம் அடைகின்றன என்று இலங்கை கூறுகிறது.

மீன்பிடி படகு
மீன்பிடி படகு (Image credits-ETV Bharat Tamil Nadu)

பாக் ஜலசந்தி கடற்பகுதியில் வரலாற்று ரீதியாகவே இந்தியா-இலங்கை மீனவர்கள் பரஸ்பரம் பகிர்வு அடிப்படையில் மீன்பிடிப்பதை மேற்கொண்டுள்ளனர். கடல் எல்லையை வரையறுக்கும் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையேயான கடல் எல்லை ஒப்பந்தம் மேற்கொள்ளும் வரை பாரம்பரியமான மீன்பிடிக்கும் முறைகள் அமைதியாக நீடித்து வந்தன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு பகுதியை இலங்கையிடம் இந்தியா கொடுத்தது. எனினும் கச்சத்தீவு அருகே ஆன்மீக பயணம் செல்வதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும் பாரம்பரியமான மீன் பிடி தளத்துக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஒரு கால கட்டத்தில் இந்த வசதி தடுக்கப்பட்டது.

சட்டரீதியான சர்ச்சை: இந்திய மீனவர்களின் நிலை குறித்து தமிழ்நாடு அரசும், அரசியல் கட்சிகளும் அடிக்கடி கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை கடற்படை, "இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்ததாக இந்த ஆண்டு மட்டும் 537 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்,"என்று கூறியுள்ளது.பாக் ஜலசந்தி பிராந்தியத்தில் இயந்திர இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இந்தியா தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை கூறுகிறது. இந்த பிரச்னை குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இரட்டை மடி வலைகள் எனும் மீன்பிடிக்கும் முறையை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது

இரட்டை மடி வலையின் மூலம் கனமான வலைகளை பயன்படுத்தி கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் முறையால் மீன்கள் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களும் பிடிக்கப்படுகின்றன. இது அதிக அளவிலான மீன்களைப் பிடிப்பதற்கான திறன்வாய்ந்த முறையாக கருதப்படும் நிலையில், கடல் உயிர்சூழலில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வருவது அதன் இறையாண்மையை மீறியது மட்டுமின்றி கடல் சட்டங்களுக்கு எதிரானது என இலங்கை கருதுகிறது. இந்திய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித் தளங்களில் செயல்படுவதாக வாதிடுகின்றனர், இது வரலாற்று மற்றும் சட்டரீதியான சர்ச்சையை உருவாக்குகிறது.

மனிதநேய முறையில் தீர்வு: ஆழ்கடலில் மீன் பிடித்தல் உள்ளிட்ட நிலையான நடைமுறைகளுக்கு இந்திய மீனவர்கள் மாற வேண்டும் என்பதற்காக இந்தியா திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. எனினும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவது மெதுவாக உள்ளது. அதிபர் ஆன உடன் முதன்முதலாக இலங்கை அதிபர் திசநாயகே இந்தியா வந்தது குறித்து 16ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பிரதமர் மோடி-இலங்கை அதிபர் திசநாயகே இடையே ஆழ்கடல் மீன்பிடித்தல் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் நடைமுறை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை மேற்கொள்ளக் கூடாது என்பதுதான் இலங்கையின் அணுகுமுறையாக இருக்கிறது. இந்த பிரச்னையில் பரஸ்பரம் இருநாடுகளுக்கு இடையே தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை அதிபர் கூறியிருக்கிறார். இந்தியா-இலங்கை இடையேயான மீன்வளத்துறையின் இணை பணிக்குழுவின் ஆறாவது கூட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற்றது,"என்றார்.

விடுவிக்கப்பட்ட 18 மீனவர்கள்
விடுவிக்கப்பட்ட 18 மீனவர்கள் (Image credits-ETV Bharat Tamil Nadu)

இந்த சந்திப்பைத்தொடர்ந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு தரப்பிலும் வாழ்வாதார கவலைகளைக் கொண்டுள்ளதால், மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண்பதற்கு மனிதநேய முறையில் தீர்வளிப்பதற்கு உயர்ந்தபட்ச முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தொடர் பேச்சுவார்த்தை: இருதரப்பிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் விஷயங்களுக்கு தீர்வு காண, மனித நேய, ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுடன் கூடிய பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய நீடித்த அணுகுமுறையை மேற்கொள்வதுஎன்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இலங்கையின் வசம் உள்ள இந்திய மீனவர்கள், அவர்களின் படகுகளை இலங்கை அரசு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுவிக்க வேண்டும் என இந்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய மீனவர்கள், அவர்கள் படகுகளுடன் சிறைபடுத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. மேலும் அவர்களுக்கு நீண்டகால தண்டனையும், அதிக அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் தொடர்பான விஷயங்களை நிறுவப்பட்ட புரிதல்கள் மற்றும் முறைகளின் பேரில் மேற்கொள்ள வேண்டும்," எனக் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் மிஸ்ரி,"பொதுமக்களுக்கான பிரச்னை போல கருதி மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பது என பிரதமர் மோடி, இலங்கை அதிபர் திசநாயகே இருவரும் ஏற்றுக் கொண்டனர். இரண்டு நாடுகளின் பின்னணியின் அடிப்படையில் இந்த பிரச்னை புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று இரண்டு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். மேலும் இந்த பிரச்னை மனிதநேய அடிபபடையிலும், வாழ்வாதாரப் பிரச்னை என்ற முறையிலும் அணுகப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த பிரச்னையில் தீர்வை எட்டுவதற்கு இருநாடுகளும் மேலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன,"என்றார்

இதற்கிடையே, இதில் சாதகமான அம்சமாக பிரதமர் மோடி, இலங்கை அதிபர் திசநாயகே இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியபோது இலங்கை வசம் இருந்த இந்திய மீனவர்கள் 18 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். "விடுவிக்கப்பட்ட 18 மீனவர்களும் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட உள்னர்,"என இலங்கையில் உள்ள இந்திய தூரகத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.