சென்னை: ஆஸ்திரேலியாவுடனான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-ஆவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடும் போது, "சர்வதேச கிரிக்கெட்டில் இதுதான் எனது கடைசி போட்டியாக இருக்கும்.
எனக்குள் இன்னும் ஒரு கிரிக்கெட்டர் இருக்கிறார். அதன் நான் உள்ளூர் போட்டிகளில்தான் காட்ட முடியும். இத்தனை நாள்கள் ஒத்துழைப்பு வழங்கிய பிசிசிஐக்கும், சக வீரர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்," என தெரிவித்தார்.
தாயகம் திரும்பிய அஸ்வின்:
ஓய்வு அறிவித்ததும். "நான் இப்போது கிளம்புகிறேன். ஆனால் மெல்போர்னில் நீங்கள் விளையாடுவதை நான் பார்ப்போன்" என சக வீரர்களிடம் கூறிவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பிய அஸ்வின், இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
#WATCH | Tamil Nadu: People extend a warm welcome to cricketer Ravichandran Ashwin as he arrives at his residence in Chennai, a day after announcing his retirement from International Cricket. pic.twitter.com/rUt5BFX3rA
— ANI (@ANI) December 19, 2024
அவரை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து காரில் சென்னை நகரில் உள்ள அவரது இல்லத்திற்குப் புறப்பட்டு சென்றார். மேலும் ஓய்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரைவில் அது குறித்து பேசுகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சுழற்பந்து நாயகன்:
2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடங்கிய அஸ்வின், இந்திய அணியில் தனது அசாத்திய சுழற்பந்து வீச்சால் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளில் 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் 765 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 537 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
BCCI congratulates Ravichandran Ashwin on a phenomenal career 👏👏
— BCCI (@BCCI) December 18, 2024
Read 👇 #TeamIndia | @ashwinravi99 https://t.co/Ke8LreMYFt
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் படைத்துள்ளார்.
ரசிகர்கள் விமர்சனம்:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்ற அஸ்வின், இரண்டாவதாக நடைபெற்ற பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் மட்டுமே பிளேயிங் லெவவில் இடம் பெற்றார்.
இதையும் படிங்க: "கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு" துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்!
அவர் ஓய்வு பெறுவதை முன்கூட்டியே அறிந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் அஸ்வினுக்கு முறையான பேர்வெல் வைக்கவில்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.