சென்னை:17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன
இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (CSK vs RCB) எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கவுள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் இருந்தாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மகேந்திர சிங் தோனி எடுத்த முடிவு எடுத்தாக கூறப்படுகிறது. இதனால், ருதுராஜ் கெய்க்வாட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல், அதிரடியாக பேட்ஸ்மேன்கள் மற்றும் நல்ல ஃபார்மில் உள்ள பந்து வீச்சாளர்கள் கொண்டுள்ள ஃபாஃப் டு ப்ளஸி தலைமையிலான ஆர்சிபி அணி இந்த சீசனில் எப்படியாவது கோப்பையை வென்று பெங்களூரு அணியை ரசிகர்களுக்கு விருந்து படைக்க வேண்டும் என்ற கனவோடு காத்துக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு இந்த 17வது சீசன் எப்படி அமையப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.