ஐதராபாத்:அடுத்த ஆண்டு பிபரவரி - மார்ச் மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்துள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஒரு போதும் பாகிஸ்தான் பயணிக்கப் போவதில்லை, ஹபிரிட் மாடலில் போட்டியை நடத்துக் கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.
அதேநேரம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பையை நடத்துவதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பனிப் போரே நிலவுவதால், மொத்தமாக தொடரையே ரத்து செய்துவிடலாம் என்ற முடிவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடக்க இன்னும் சரியாக 100 நாட்களே உள்ளன. சாம்பியன்ஸ் கோப்பைக்கான அட்டவணையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயார் செய்து விட்டது. இந்நிலையில், தொடரை ரத்து செய்யவோ அல்லது காலம் தாழ்த்தி நடத்தவோ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.