மேஷம்: உங்கள் இல்வாழ்க்கையில் சற்று பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு சிக்கலான விஷயத்தை, சிறப்பாக கையாளக் கூடிய முதிர்ச்சி உங்களிடத்தில் உள்ளது. இந்த வாரத்தில் பணத்தை செலவழிக்கும் போது, கவனமாக இருக்கவும். தேவையற்ற செலவுகளை செய்து பணத்தை வீணடிக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பதவியில் மாற்றத்தை விரும்பினால், எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற வேண்டாம்.
மாணவர்கள் இந்த வாரம் கடினமாகப் படிக்கவில்லை. அப்படி உழைத்தால் தான் நீங்கள் எதிர்பார்க்கும் ரேங்க் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் உடல்நலத்தைப் பற்றி பார்க்கும் போது, மன அழுத்தம் தரும் விஷயங்களை புறக்கணியுங்கள். ஏனெனில், இது ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். உங்களுக்கு, சளி, இருமல் அல்லது பிற நோய்கள் தாக்கக்கூடும். ஆகவே குளிர்ச்சியான பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: இந்த வாரம் நீங்களும் உங்கள் துணையும் ரொமாண்டிக்காக பொழுதைக் களிப்பீர்கள். இந்த வாரத்தில் உங்கள் முந்தைய முதலீடுகளிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கும். வியாபாரம் செய்யும் நபர்கள் இந்த வாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வுகள் காணப்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள், இந்த வாரத்தில் உத்தியோக நிமித்தமாகப் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உயர்கல்வி கற்க விரும்பும் இளைய சமுதாயத்தினர் கடினமாக உழைத்தால் தான் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு வயிறு சம்பந்த பிரச்சினைகள் வரலாம். அதனால், கவனமாக இருக்கவும்.
மிதுனம்: இந்த வாரம் யோகமான வாரம். உங்கள் கணவர் உங்களுக்காக நேரம் ஒதுக்கவில்லை எனக் கவலைப்படாதீர்கள். அவரின் பரபரப்பான உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்த வாரத்தில், ஏதோ ஒரு சில இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் மாற்றம் செய்ய விரும்பினால், இது தான் சரியான தருணம். இந்த கால கட்டம் மிகவும் அருமையாக உள்ளது.
ஏதாவது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போகிறீர்கள் என்றால், நிறையப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் முன்பு உங்களுக்கு துன்பம் அளித்த வியாதி, மீண்டும் தலை தூக்க வாய்ப்புள்ளது. மருத்துவரைக் கலந்து ஆலோசித்து. நோயை சரி செய்து கொள்ளுங்கள்.
கடகம்: இந்த வாரம் சாதகமான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு மிகவும் பிடித்த, உங்களின் பழைய நண்பரை சந்திப்பீர்கள். திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் புதியதாக ஒரு முயற்சியைத் துவங்குவார்கள். உங்களுக்கு அவசரமாக நிதி உதவி தேவை எனில் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் நிதி விஷயங்களிலும் கைகொடுப்பார்கள்.
மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கிறார்கள் என்றால், உற்சாகமாக அதில் பங்கேற்பார்கள். அதில் வெற்றியையும் காண்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். யோகா, காலை நடைப்பயிற்சி ஆகியவற்றை தினமும் கடைப்பிடியுங்கள்.
சிம்மம்: இந்த வாரம், மிகவும் சிறப்பாகவே இருக்கும். உங்கள் அன்பான துணையுடனான உங்கள் உறவில் சந்தேகப்படாதீர்கள். உங்கள் இல்வாழ்க்கை மேலும் சிறக்க, தயவு செய்து உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வையுங்கள். நீங்கள் இந்த வாரத்தில், ரியல் எஸ்டேட்டிலோ, அல்லது நிலம் வாங்குவது தொடர்பாகவோ முதலீடு செய்யலாம். ஒரு பிரபலமான நபரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள், வேலையை மாற்ற வேண்டாம். தற்போது உள்ள வேலையிலேயே, பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மாணவர்கள் உயர் கல்விக்கோ அல்லது போட்டித்தேர்வுகளுக்கு தயாராகின்றார்கள் எனில், அவர்களது திறமை மற்றும் உழைப்பை அதற்காக செலவழிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் தொண்டையில் புண் ஏற்படக்கூடும். ஆகவே குளிர்ச்சியான உணவுகளையும் புளிப்பான உணவுகளையும் தவிர்க்கவும்.
கன்னி: இந்த வாரத்தில் பல தரப்பட்ட அனுபவங்கள் காத்திருக்கின்றது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுவது நல்லது. ஏனெனில் பின்னாளில் நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் என்ற தவறான புரிதல்கள் வர வாய்ப்புண்டு. உங்கள் வருவாயும் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் செலவுகளும் அதிகரிக்கும். இந்த வாரத்தில் மிகவும் அனுபவசாலியான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அவரின் உதவியால் உங்கள் நிறுவனத்தில் நல்ல வளர்ச்சியைக் காணுவீர்கள். இந்த வாரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்படலாம். பருவ கால நோய்களும் தொந்தரவு தரக்கூடும். ஆகவே உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா போன்ற உடற்பயிற்சிகளைத் தினமும் செய்யவும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு யோகமான வாரம். உங்கள் காதல் உறவில் எந்த விஷயத்தைப் பற்றி பேச முடிவு செய்தாலும், நன்கு யோசித்துப் பேசுங்கள். அப்போது தான் எவ்வித சண்டையும் ஏற்படாது. உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் போது, பணவரவு நன்றாக இருக்கும்.
நீங்கள் அதிகமாக செலவும் செய்வீர்கள். ஆகவே மிகவும் கவனமாக செலவு செய்யுங்கள். இல்லையெனில் பணம் எப்படி வருகிறது, எப்படிச் செலவழிக்கிறீர்கள் என்ற கணக்கே இருக்காது. வேலையை மாற்ற வேண்டும் என நினைத்தால் இன்னும் சிறிது காலம் பொறுத்து இருக்கவும். இப்போது நேரம் சாதகமாக இல்லை. எங்கு பணிபுரிகின்றீர்களோ அங்கேயே தொடர்ந்து பணியாற்றவும்.
விருச்சிகம்: இந்த வாரம் மிகவும் பிசியாகவும், பரபரப்பாகவும் இருப்பீர்கள். ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட முடியாது. இதனால் உங்களுக்கும், உங்களுடைய வாழ்க்கைத்துணைக்கும் இடையே சிறிது பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த வாரம் உங்கள் நிதி நிலைமையைப் பற்றிப் பார்க்கும் போது, உங்களின் பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கலாம். இதனால் இந்த வாரமே சிறப்பாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்த வரை, உயர் கல்வி கற்க விரும்பினால், இது அதற்கான சரியான நேரம். அதே சமயம் போட்டிகளுக்காக தயாராகின்றீர்கள் எனில் வெற்றி நிச்சயம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குளிர்ச்சியான பானங்கள், தயிர் போன்றவற்றைத் தவிர்க்கவும். ஏனெனில் தொண்டையில் புண் வர வாய்ப்புள்ளது.
தனுசு: இந்த வாரத்தில் சில நுட்பமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் உங்களுடைய பண வரவு பற்றிகவலைப்பட நேரிடலாம். உங்கள் கையில் வேண்டிய அளவு பணம் இருக்காது. ஆகவே, அளவுக்கு மீறி செலவு செய்யாமல், கவனத்துடன் இருங்கள்.
உங்கள் வியாபாரத்தைப் பொறுத்த வரை, ஒரு முக்கிய வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வீர்கள். இதனால் நிறையத் தொடர்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களின் கவனம் சிதறுவதால், அவர்கள் படிப்பில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆனால், வேறு ஒரு வகையில் பார்த்தால், நீங்கள் போட்டிகளுக்கு தயாராகிறீர்கள் என்றால், உங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன்: சேமிப்பின் அவசியத்தை கற்றுக் கொள்வது நல்லது.. எந்த ராசிக்குத் தெரியுமா?
மகரம்: இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். முன்பு நிலுவையிலிருந்த உங்களின் வியாபார விஷயங்கள் முடிவுக்கு வருவதால், உங்கள் கையில் பணப் புழக்கம் இருக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த உங்கள் நிறுவனம் மறுபடியும் லாபகரமாக இயங்கத் துவங்கும்.
மாணவர்களின் கல்வியைப் பற்றி பார்க்கும் போது, கல்வியைத் தவிர மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். உங்களின் தேர்வு முடிவுகள், நீங்கள் நினைத்தது போல் இருக்காது. உங்கள் உடல் நலம் சீராக இருக்காது. பல் வலி போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுவீர்கள். இதுபோன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்பம்: இந்த வாரத்தில் உங்கள் துணையுடன் சின்ன சின்ன விஷயங்களில் கூட வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் இல்வாழ்க்கையில் அன்பும், அரவணைப்பும் நிரம்பி இருக்க வேண்டும் என விரும்பினால், அதற்கு நீங்கள் சற்று திறமையாகவும், புத்திசாலித்தனமாகவும் நடக்க வேண்டும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்பினால், திறமை வாய்ந்த ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு முடிவெடுப்பது தான் சிறந்தது.
எது எப்படி இருப்பினும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், இந்த வாரம் அமோகமாக உள்ளது. உங்கள் உத்தியோகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும். மாணவர்களைப் பற்றி பார்க்கும் போது, உங்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமெனில் கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பது நல்லது. உங்கள் உடல்நலத்தைப் பொறுத்தவரை, சற்று சருக்கல் தான்.
மீனம்: இந்த வாரம் ரொமாண்டிக் உறவுகளில் ஒரு பாசிட்டிவ்வான முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் லாபம் ஈட்டும் வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இது அமோகமான தருணம்.
நீங்கள் வேலையை மாற்ற விரும்பினால், இது அதற்கான சிறப்பான தருணம். அரசு வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளை நீங்கள் எழுத முயற்சி செய்கிறீர்கள் எனில், இந்த கால கட்டம் அதற்கு சாதகமாக உள்ளது. உங்கள் ஆரோக்கத்தைப் பற்றி பார்க்கும் போது உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகிறது.